‘நச்’சுனு 4 கேள்விகள் சந்தேகங்களும் –விளக்கங்களும்!

‘நச்’சுனு 4 கேள்விகள் 
சந்தேகங்களும் –விளக்கங்களும்!

ஆலயத்தில் வணங்க வேண்டிய திசை தெரியுமா?
லயங்களுக்கு சென்று இறைவனை வழிபட்ட பின்பு கொடிமரம், பீடம் ஆகியவற்றிற்கு அருகில் மட்டுமே சுவாமியை தரையில் விழுந்து வணங்க வேண்டும். இவ்வாறு வணங்கும்போது கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி சுவாமி அமைந்த ஆலயங்களில் வடக்கு நோக்கியும் வடக்கு மற்றும் தெற்கு நோக்கி சுவாமி அமைந்த ஆலயங்களில் கிழக்கு நோக்கியும் மட்டுமே வணங்க வேண்டும். 

அஷ்டதிக் பாலகர்களை துதிப்பதால் என்ன பலன்?

*
இந்திரன் - சொத்தும் சுகமும் சேரும்.

* அக்னி - பிரகாசமேனி நற்பலன் கிடைக்கும்.
* எமன் - நல்வினைப் பயன் பெறலாம்.
* நிருதி - பகை பயம் விலகும்.
* வருணன் - பயிர் வளர களிப்பும் சுகமும் உண்டாகும்.
* வாயு - நீண்ட ஆயுளும் வளமும் ஏற்படும்.

* குபேரன்-  சம்பத்தும் சுகமும் ஏற்படும்.

* ஈசானன் - அறிவு ஞானம் பெருகும் .

சிவனின் முக்கண்கள் என்ன தெரியுமா? 

சிவபெருமானுக்கு சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் மூன்று கண்களாக திகழ்கின்றனர். இவை இறைவனது பேரொளி, குளிர்ச்சி, பரிசுத்தம் ஆகியவற்றை குறிக்கின்றன.

இறை வழிபாட்டு முறைகள் என்ன?
ந்த கோயிலுக்கு சென்றாலும் முதலில் ராஜகோபுரத்தை வணங்க வேண்டும். கோபுரம் இல்லாத கோயில்களில் வாசல் படிகளைத் தொட்டு வணங்க வேண்டும். காரணம் இந்த படிகள் இறைவனின் அடியார்களாக கருதப்படு கின்றன. உள்ளே சென்றதும் பலிபீடத்தையும் கொடிமரம் இருந்தால் அதையும் வலம் வந்து வணங்க வேண்டும். பிறகு இறைவனின் வாகனத்தையும் இறைவன் இருக்கும் இடத்தையும் வலமாக சுற்றி வந்து வழிபட வேண்டும். தெய்வத்தோடு ஒன்றிய நிலையில் வணங்கி வழிபாட்டை முடித்த பிறகு ஆலயத்தில் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து தியானம் செய்து அந்நிலையிலேயே இறையருளை பெற்றுச் செல்ல வேண்டும்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com