நவராத்திரி தகவல்கள்!

நவராத்திரி தகவல்கள்!
nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

* ராசக்தி பண்டாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாம் நாள் அவனை வதம் செய்த வெற்றித்திருநாள் விஜயதசமி ஆகும். முற்காலத்தில் அரசர்கள் விஜயதசமி அன்று சிம்மாசனம் வெண்கொற்றக் குடை, படைக்கலன்கள் ஆகியவற்றிற்கு பூஜை செய்திருக் கிறார்கள்.

* ர்ஜுனன் விஜயதசமியன்று, தான் வைத்திருந்த ஆயுதங்களை பூஜை செய்து, எடுத்துச் சென்று மகாபாரதப் போரில் வெற்றி பெற்றான்.

* சாமுண்டீஸ்வரி தேவியை யானை மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சியே மைசூரில் தசராவாகக் கொண்டாடப்படுகிறது‌. 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர்கள், தசரா விழாவை ஹம்பி நகரில் ஆரம்பித்து வைத்தனர். பிறகே மைசூருக்கு மாற்றப்பட்டது.

* திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியுள்ள சரஸ்வதி தேவிக்கு நான்கு தலைகள் உள்ளன. இந்த தேவியை வணங்குவதால் நான்கு வேதங்களிலும் சிறந்து விளங்குவதுடன், பிரம்மனின் அருளும் கிட்டும் என்பது ஐதீகம்.

* வேத நூல்களில் சரஸ்வதி தேவியின் வாகனம் மயில் என்று கூறப்பட்டுள்ளது. வேறு சில ஆன்மீக நூல்களில் அன்னப்பறவை வாகனமாக சொல்லப்பட்டுள்ளது.‌ வட மாநிலங்கள் சிலவற்றில், சரஸ்வதி தேவி, ஆடு மீது அமர்ந்து காட்சி தருகிறாள். மேஷ வாகனா என்று அங்கு சரஸ்வதிக்கு பெயர். யாளி வாகனத்திலும் சிம்ம வாகனத்திலும் சரஸ்வதி எழுந்தருளுகிறாள் என்று பௌத்தர்கள் வழிபடுகின்றனர்.

* டிசா மாநிலத்தில் நவராத்திரி விழா சோடச பூஜை என்று 16 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜையன்று பூரி ஜெகநாதர் கோயிலில் ஜெகநாதரின் கரங்களில் உள்ள சங்கு சக்கரங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com