பஞ்சகவ்யத்தின் அதிதேவதைகள் யாரென்று தெரியுமா?

PanchaKavyathin Athithevathaigal Yaarendru Theriyumaa?
PanchaKavyathin Athithevathaigal Yaarendru Theriyumaa?https://www.muthukamalam.com
Published on

றைவனின் அபிஷேகத்துக்கு ஆயிரம் பொருட்கள் உகந்ததாக இருந்தாலும் அனைத்தையும் விட முதன்மையானதும் சிறப்பானதுமான பொருள் பஞ்சகவ்யம். தீ எப்படி கட்டைகளை எரித்து சாம்பலாக்குமோ அதுபோல், மனிதனது பாவங்களையும் வியாதிகளையும் பொசுக்கக்கூடிய வல்லமை பஞ்சகவ்யத்துக்கும் உண்டு. பஞ்சகவ்யத்தை தமிழில் ஆனைந்து அல்லது ஆனஞ்சு பற்றிய குறிப்புகள் பன்னிரு திருமுறைகளில் மிகச்சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளன.

பஞ்சகவ்யம் என்பது பசுக்களில் இருந்து கிடைக்கும் ஐந்து வித பூஜை பொருட்கள், அதாவது கருமை நிற பசுவின் கோமியம், வெண்ணிற பசுவின் சாணம், தாமிர வண்ணம் உள்ள ஆவின் பால், இரத்த நிறம் உடைய ஆவினது தயிர், கபில நிறப் பசுவின் நெய் ஆகியவையே பஞ்சகவ்யத்தில் உள்ள பொருட்கள்.

இப்படி பல்வேறு நிறமுடைய பசுக்கள் கிடைக்காவிட்டால் மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து பொருட்களையும் கபில நிற பசுவிடமிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று தர்ம சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

பஞ்சகவ்யம் இறைவனின் ஆராதனை பொருட்களில் முதன்மையானது. பஞ்சகவ்யத்தின் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அதிதேவதை உள்ளனர். பாலுக்கு உரிய தேவதை சந்திரன், தயிருக்கான அதிதேவதை வாயு, நெய்யில் சூரியன், கோமியத்தில் வருணன், சாணத்தில் அக்னி ஆகியோர் உறைந்துள்ளதாக ஐதீகம். இதனால் இறைவனின் திருமுடியின் மீது திருமஞ்சன நீராட்டின்போது பஞ்சகவ்யத்திற்கு முதன்மையான இடம் உண்டு.

இதையும் படியுங்கள்:
ஆண்களுக்கான சிறந்த 10 பொழுதுபோக்குகள் தெரியுமா?
PanchaKavyathin Athithevathaigal Yaarendru Theriyumaa?

சூரியன், சந்திரன், வாயு, வருணன், அக்னி ஆகிய அதிதேவதைகளின் அருளால் நீங்காத நோயும் நீங்கும். வராத செல்வமும் வந்து சேரும். பெறாத அருளும் கிடைத்து வாழ்வின் அனைத்து வித இருளும் நீங்கும். இதனால்தான் பஞ்சகவ்யத்தை மனிதனுக்குக் கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம் என்கின்றனர்.

சிவபெருமானுக்கு மிகவும் விருப்பமான அபிஷேகப் பொருள் பஞ்சகவ்யம். சிவராத்திரி அன்று நடைபெறும் நான்கு கால பூஜைகளில் முதல் காலத்துக்குரிய பூஜை பொருளாக பஞ்சகவ்யம் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com