பரிகாரங்கள் பலிப்பதில் சகுனங்களின் பங்கு!

பரிகாரங்கள் பலிப்பதில் சகுனங்களின் பங்கு!

ஜாதகத்தில் தோஷங்கள் ஏதேனும் இருந்தால், அந்த தோஷம் நீங்குவதற்காக ஜோதிடரை வைத்து பரிகாரம் செய்வார்கள். அவ்வாறு தோஷங்கள் நீங்குவதற்காக பரிகாரங்கள் செய்து கொண்டிருக்கும்போது தோன்றும் சகுனங்களை வைத்து, செய்யும் பரிகாரம் பலன் தருமா? தராதா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

பரிகாரம் செய்துகொண்டிருக்கும் சமயத்தில் ஏதாவது சகுனங்கள் தோன்றுகிறதா என்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். சகுனங்கள் பார்த்து கூறப்படும் பரிகாரங்கள் நிச்சயமாக பலன் தரும். எனவே, பரிகாரம் சம்பந்தமான சகுனங்களை இந்தப் பதிவில் காண்போம்.

* பரிகாரங்களைக் செய்யும்போது கோயில் மணியோ அல்லது பூஜை மணியோ ஒலிப்பதைக் கேட்க நேர்ந்தால் பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.

* யாராவது கோயில் பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தால் செய்யும் பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.

* மந்திர ஒலி அல்லது பக்திப் பாடல்களைக் கேட்க நேர்ந்தால் பரிகாரங்கள் நிச்சயம் பலன் தரும்.

* கோயில் அர்ச்சகர் அங்கே வரக்கண்டால் செய்யும் பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.

* யாராவது ஒருவர் குளித்துவிட்டு வருவதைக் கண்டால் பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.

* எந்த தெய்வத்தின் படம் அல்லது உருவம் கண்ணில் படுகிறதோ அந்த தெய்வத்தை வணங்கி வர, பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.

இதையும் படியுங்கள்:
பிரம்ம ஞானத்தில் தந்தையை மிஞ்சிய ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி!
பரிகாரங்கள் பலிப்பதில் சகுனங்களின் பங்கு!

* யாராவது ஒருவர் ஒரு கோயிலைப் பற்றியோ, ஒரு தெய்வத்தைப் பற்றியோ பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டாலோ, ஒரு தெய்வத்தின் பெயரை உச்சரிப்பதைக் கேட்டாலோ, அந்த கோயில் அல்லது அந்த தெய்வத்தை வழிபட பரிகாரம் உண்டாகும்.

* யாராவது வந்து யாசகம் கேட்டாலோ அல்லது யாசகரைக் காண நேர்ந்தாலோ, தான தர்மங்கள் செய்வதன் மூலம் பரிகாரம் உண்டாகும்.

* துணி வெளுப்பவரையோ அல்லது துணிமணிகளை கஞ்சிப்போட்டு தேய்க்கும் பெண்ணையோ காண நேர்ந்தாலோ அல்லது அதுபோன்றவர் குரலைக் கேட்க நேர்ந்தாலோ வஸ்திர தானம் செய்வதன் மூலம் பரிகாரம் உண்டாகும்.

* யாராவது வந்து, என்ன பொருள் வேண்டும் என்று கேட்கிறார்களோ, அந்தப் பொருளை தானம் செய்ய பரிகாரம் உண்டாகும். கேட்ட பொருள் விலை உயர்ந்ததாக இருந்தால் அப்பொருள் போன்ற பிரதிமையை தானம் செய்யலாம்.

* யாராவது தலைமுடியில் சிக்கு நீக்குவதைக் கண்டால் பரிகாரம் மூலம் தடைகள் நீங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com