பெருங்குளம் ராமகிருஷ்ணன் வழங்கும் புத்தாண்டு ராசி பலன் 2025 - துலாம்!

Libra - New Year Rasi Palan 2025
Libra - New Year Rasi Palan 2025
Published on

கணிப்பு: ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் - தக்ஷிணாயம் - ஹேமந்த ரிது - மார்கழி மாதம் 16ம் நாள் பின்னிரவு 17ம் நாள் முன்னிரவு அன்றைய தினம் தினசுத்தி அறிவது சுக்லபக்ஷ ப்ரதமை - செவ்வாய்கிழமை பின்னிரவு புதன்கிழமை முன்னிரவு - பூராடம் நக்ஷத்ரம் - சித்தயோகம் - கன்னியா லக்னம் - தனுர் சந்திரா லக்னம் - ரிஷப நவாம்சம் - விருச்சிக சந்திர நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2025ம் ஆண்டு பிறக்கிறது. இனி, இந்த 2025ம் ஆண்டுக்கான ராசிகளின் பொதுப்பலன்களைப் பார்ப்போம்.

துலாம் ராசி அன்பர்களே... இது உங்களுக்காக...

துலாம்:

ந்த ஆண்டு மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம்.  பணவரத்து இருக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  மற்றவர்கள் மூலம் கிடைக்கும். வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். தாமதமான  போக்கு காணப்பட்டாலும் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள்  மனதுக்கு  சந்தோஷத்தை தருவதாக இருக்கும்.  உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.  கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுதரும்.

தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து  குறைவு இருக்காது.  தொழில்  கூட்டாளிகளுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு  நடக்க வேண்டி இருக்கும்.  மற்றவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். 

பெண்களுக்கு கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொண்டர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

கலைத்துறையினருக்கு மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். கலைத்துறையினருக்கு தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில்  ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.

மாணவர்களுக்கு கவனமாக படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

சிறப்பான கிழமைகள்: வெள்ளி, சனி.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6, 9.

அனைத்து புத்தாண்டு ராசி பலன்களையும் காண 'Click here'

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com