பெருங்குளம் ராமகிருஷ்ணன் வழங்கும் புத்தாண்டு ராசி பலன் 2025 - விருச்சிகம்!

Scorpio - New Year Rasi Palan 2025
Scorpio - New Year Rasi Palan 2025
Published on

கணிப்பு: ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் - தக்ஷிணாயம் - ஹேமந்த ரிது - மார்கழி மாதம் 16ம் நாள் பின்னிரவு 17ம் நாள் முன்னிரவு அன்றைய தினம் தினசுத்தி அறிவது சுக்லபக்ஷ ப்ரதமை - செவ்வாய்கிழமை பின்னிரவு புதன்கிழமை முன்னிரவு - பூராடம் நக்ஷத்ரம் - சித்தயோகம் - கன்னியா லக்னம் - தனுர் சந்திரா லக்னம் - ரிஷப நவாம்சம் - விருச்சிக சந்திர நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2025ம் ஆண்டு பிறக்கிறது. இனி, இந்த 2025ம் ஆண்டுக்கான ராசிகளின் பொதுப்பலன்களைப் பார்ப்போம்.

விருச்சிக ராசி அன்பர்களே... இது உங்களுக்காக...

விருச்சிகம்:

ந்த ஆண்டு எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து  முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும்.  நன்மை தீமைகளை பற்றி கவலைப் படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். எப்போதும் பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.

தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும்.  தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறுவீர்கள்.  கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.  திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும்.  கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்.  பிள்ளைகளுக்காக  செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும்.  பிள்ளைகளின்  செயல்பாடுகள் ஆறுதலை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.

கலைத்துறையினர்  எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன்  பகை ஏற்படலாம். பண வரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். திறமை வெளிப்படும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வணங்க மன அமைதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

சிறப்பான கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 7.

அனைத்து புத்தாண்டு ராசி பலன்களையும் காண 'Click here'

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com