அடிப்படையான முதல் ஒலி அ. இதுவே ஒலிகளுக்கெல்லாம் தாயாகவும் தந்தையாகவும் உள்ள ஒலி. ‘உ’ என்பது அடுத்த ஒலி. இதுவே உயிர் ஒலி. அகரமும், உகரமும் சேருகிறபோது ஓங்கார ஒலி பிறக்கிறது. அ + உ = ஓ. ஓகாரமும் ‘ம்’ ஒலியும் சேர்ந்து சிங்கார ஒலியாகிறது. இது நம்மை உயர்த்துவதைக் குறிக்கும்.
‘ஓ’ என்று தொடர்ச்சியாக சொல்ல, மனதில் அமைதியும், தெளிவும் பிறக்கும். ஓங்கார ஒலி, உயிர்க் குற்றங்களை அகற்றுகிறது. ஆன்மாவை இறைவனிடம் கொண்டு சேர்த்து புனிதப்படுத்துகிறது.
‘ஓம்’ என்பது பிரணவம். இந்தப் பிரணவம்தான் வேதத்தின் மூலம். ‘ஓம்’ என்ற ஒலியின் வடிவமே பிள்ளையார். அவர் ஓங்கார வடிவமானவர். குற்றங்கள், துன்பங்களை நீக்கி, இடையூறுகளைப் போக்குபவராக பிள்ளையார் உள்ளதால், இவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராக விளங்குகிறார்.