வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் கெட்டதாம்... உடனே தூக்கிப் போடுங்க..

vastu tips
vastu tips
Published on

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் அதிகம் பார்க்கப்படுகிறது. வீடு கட்டுவது முதல் வாழும் வாழ்க்கை வரை அனைத்திற்கும் வாஸ்து பார்க்கப்படுகிறது. அதற்கென்று தனி சாஸ்திரமே வகுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு வீட்டில் பூனை, வௌவால் என பறவை, விலங்குகள் வருவதற்கு கூட சகுணம் பார்க்கப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் சில பொருட்கள் இருப்பது அசுப காரியத்தை உண்டாக்கும் என சொல்லப்படுகிறது. அப்படி வீட்டில் எந்தெந்த பொருட்களை வைக்க கூடாது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உடைந்த கண்ணாடி:

அனைவரது வீடுகளிலும் கண்ணாடி இருக்கும். இந்த கண்ணாடி உடைந்திருந்தால் அதை உடனடியாக தூக்கி எறிந்துவிடவேண்டுமாம். உடைந்த கண்ணாடி வீட்டில் இருப்பது கெட்டதாகும் என சொல்லப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி உடைந்த கண்ணாடி வீட்டில் உள்ள ஒரு நபருக்கு உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை உண்டாக்கும் என கூறப்படுகிறது. இதனால் உங்கள் வீடுகளில் உடைந்த கண்ணாடி இருந்தால் உடனடியாக வீசி விடுங்கள். இதே போன்று உடைந்த புகைப்படங்களை வைத்திருப்பதை தவிர்க்கவும்.

ஓடாத கடிகாரம்:

வீடுகளில் நேரத்தை பார்க்க பயன்படுத்தப்படும் கடிகாரம் பல்வேறு வகைகளில் இருக்கும். தற்போது டிஜிட்டல் கலாச்சாரத்திற்கேற்ப பலர், தங்களது புகைப்படம், நினைவு படங்களில் கூட கடிகாரம் வடிவமைத்து கொள்கிறார்கள். கடிகாரம் பேட்டரியில் தான் ஓடும். இதனால் பேட்டரி தீர்ந்தவுடன் கடிகாரம் சுத்துவது நின்றுவிடும். ஆனால் பலர் பேட்டரியும் மாற்றாமல் ஓடாத கடிகாரத்தை வைத்திருப்பார்கள். இது வாஸ்து சாஸ்திரத்தில் தவறு என சொல்லப்படுகிறது. மீண்டும் கடிகாரத்தை ஓட வைக்க வேண்டும் இல்லையென்றால் அதை கழட்டி வைப்பது சிறந்ததாகும். இப்படி செய்வதன் மூலம் வீடுகளில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

கிழிந்த ஆடைகள்:

சிலர் கிழிந்த ஆடைகளை பத்திரமாக எடுத்து வைப்பார்கள். இந்து மத நம்பிக்கையின் படி இது லட்சுமிக்கு பிடிக்காது என்பதால் வீட்டில் நிதி பிரச்சனை ஏற்படும் என சொல்லப்படுகிறது. இதனால் கிழிந்த ஆடைகள் குவியலாக வைத்திருந்தால் அதை தூக்கிவீசிவிடுங்கள்.

இது போன்று செய்வதன் மூலம் வாஸ்து தவறுகள் இன்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழமுடியும்.

பொறுப்பு துறப்பு: மத நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவையே ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com