புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு தளிகை செய்வது எப்படி?

Puratasi Saturday Worship
Puratasi Saturday Worship
Published on

னி பகவானால் ஏற்படும் சிக்கல்கள் நீங்க புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். புரட்டாசி சனிக்கிழமைக்கு அப்படி என்ன சிறப்பு என நினைக்கிறீர்களா? சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலம் இந்த புரட்டாசி மாதம். இந்த மாதத்தில் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். மகாவிஷ்ணுவின் அருளை பெறக்கூடிய நாள் என்பதால் இந்த நாளில் விரதம் இருந்தால் மகாலட்சுமியின் அருளும் நமக்குக் கிடைக்கும்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் தளிகை அல்லது படையல் இட்டு வழிபடும் முறை உண்டு. நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை. புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு தளிகை போடுவது முதல் சனிக்கிழமை மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் செய்யப்படும்.

புரட்டாசியின் இரண்டாவது மற்றும் நான்காவது  சனிக்கிழமைகளில் மஹாளய பட்சம் மஹாளய அமாவாசை. இதுபோல் வருவதால் அந்த நாட்களில் தளிகை இட்டால் அந்த பிரசாதத்தை நம்மால் சாப்பிட முடியாது. அதனால்தான் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளை தவிர்க்க வேண்டும் என சொல்லுவார்கள்.

வீட்டில் உள்ள பெருமாளின் உருவப்படத்தை ஒரு மனைப்பலகையில் எடுத்து வைத்து அழகாக அலங்கரிக்க வேண்டும். தங்களுக்குக் கிடைக்கும் மலர்களைப் பயன்படுத்தி அலங்கரிக்கலாம். குறிப்பாக பெருமாளுக்குப் பிடித்தமான துளசி இருப்பது அவசியம். பெருமாளின் படத்திற்கு முன் சிறிய விநாயகர் விக்ரஹம் அல்லது மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வெறும் வயிற்றில் அத்திப்பழ தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 10 நன்மைகள்!
Puratasi Saturday Worship

அதன் பின்பு பெருமாள் படத்திற்கு முன் மூன்று இலைகள் போட்டு ஐந்து வகை சாதத்தை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், அல்லது நெல்லிக்காய் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் வெங்காயம் சேர்க்காமல் மிளகு மட்டும் போட்டு செய்யும் உளுந்து வடை சுண்டல் பானகம் நெய்வேத்தியமாகப் படைக்க வேண்டும். மாவிளக்கு படைத்து வழிபடும் வழக்கம் இருந்தால் அதையும் சேர்த்து வழிபடலாம். இந்த சாதங்களை வரிசையாக வைத்து வழிபடலாம் அல்லது இந்த சாதங்களை கொண்டு பெருமாளின் திருமுகத்தை வரைந்தும் வழிபடலாம். தீப, தூப ஆராதனை காட்டி கோவிந்த நாமம் சொல்லி வழிபட்ட பிறகு தளிகையில் வைக்கப்பட்ட சாதத்தை நாம் சாப்பிட வேண்டும்.

சனிக்கிழமையில் முழுவதுமாக உபவாசம் இருந்து பகலில் தளிகை போட்டு வழிபட்ட பிறகு அந்தப் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம் அல்லது காலையில் எளிமையான உணவு எடுத்துக்கொண்டு விரதம் இருக்கலாம். தளிகை போட்ட பிறகு கோவிந்த நாமும் சொல்லி வழிபட வேண்டும். ‘கோவிந்தா கோவிந்தா’ என சொல்லி வழிபடும்போது கஷ்டங்கள் மீண்டும் வராது என்பது ஐதீகம். தெரிந்தவர்கள் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி வழிபடலாம். தெரியாதவர்கள் கோவிந்த நாமம் மட்டும் சொல்லி வழிபடலாம். வீட்டில் அஷ்ட லட்சுமியின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமையில் நாமும் திருப்பதி பெருமாளுக்கு தளிகை போட்டு விரதம் கடைபிடித்து அவரின் அருளைப் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com