இராமாயணம் காட்டும் நவ பக்தி!

Ramayanam shows nava Bhakthi
Ramayanam shows nava Bhakthihttps://www.tallengestore.com

1. ஸ்ரவணம்: ராம நாமத்தையும் அவரது மகிமைகளையும் கேட்டல் - ராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் இருந்து பக்தி செய்யும் அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயன்.

2. கீர்த்தனம்: ஸ்ரீராமன் மகிமைகளைப் பாடி மகிழ்ந்து பக்தி செய்தல் - ஸ்ரீராமனின் வாழ்க்கையை கோகிலமாய்க் கீர்த்தனம் செய்து ராம காவியத்தை அளித்த வால்மீகி முனிவர்.

3. ஸ்மரணம்: ஸ்ரீராமனையே நினைவில் நிறுத்தி பக்தி செய்தல் - கல்யாணராமனையே நினைவில் நிறுத்தி துதி செய்து. அசோக வனத்தில் அமைதியாக தவம் இருந்து பக்தி செய்த சீதா பிராட்டி.

4. பாத சேவனம்: ஸ்ரீராமனின் பாதங்களை சேவித்து பக்தி செய்தல் - ஸ்ரீராமனின் பாதுகைகளையே துணையாகக் கொண்டு அவரின் பிரதிநிதியாக இருந்து அயோத்தியை ஆண்ட பரதனின் பக்தி.

5. அர்ச்சனம்: ஸ்ரீராமனை வழிபடுதல் - பல ஆண்டுகளா தினமும் ஸ்ரீராமனுக்காகக் காத்திருந்து , பழங்கள் சேகரித்து , அவர் வந்தவுடன் வழிபட்ட சபரி எனும் முதியவள்.

6. வந்தனம்: ஸ்ரீராமனை வணங்குதல் - சரணாகதித் தத்துவத்தை மேற்கொண்டு ஸ்ரீராமனின் அடி பணிந்து வணங்கிய விபீஷணன்.

இதையும் படியுங்கள்:
சீதா தேவி வீற்றிருக்கும் அயோத்தி கனக் பவன் பற்றி தெரியுமா?
Ramayanam shows nava Bhakthi

7. தாஸ்யம்: ஸ்ரீராமனின் அடியவரை சேவித்தல் - ஸ்ரீராமனுக்குத் தொண்டு புரிவதே வாழ்வின் நோக்கமாக இருந்து அதனைத் திறம்படச் செய்து தாஸனாய் பக்தி செய்த லக்ஷ்மணன்.

8. சக்யம்: ஸ்ரீராமனுடன் நட்பை வளர்த்து பக்தி பண்ணுதல் - ஸ்ரீராமபிரானிடம் நட்பு பூண்டு, சேது அணை கட்டி , யுத்தத்தில் பக்திபூர்வமாய் போர் புரிந்த பல்லாயிரக்கணக்கான வானரப் படை.

9. ஆத்ம நிவேதனம்: ஸ்ரீராமனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தல் - ராவணனுடன் போராடி. சீதையை மீட்க முயன்று , பின்னர் இராமனிடம் தனது உயிரையே ஈந்து ஆத்ம சமர்ப்பணம் செய்த ஜடாயு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com