பூஜை அறையில் கடவுளுக்கு தண்ணீர் வைத்து வழிபடுவது ஏன்?

Pooja room
Pooja room
Published on

நமது வீட்டிலோ அல்லது கோவில்களிலோ கடவுளுக்கு பழம், தேங்காய், மலர் மாலை, பிரசாதம் போன்றவற்றை வைத்து வழிபடுவதைப் பார்த்திருப்போம். இவை கூட தண்ணீர் வைத்தும் வழிபடுவார்கள். ஆனால், தண்ணீர் வைத்து கடவுளை வழிபட வேண்டும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும், அவ்வாறு வழிபடுவதற்கான காரணத்தை அறிந்திருக்க மாட்டார்கள்.

அந்த வகையில், நமது வீட்டின் பூஜை அறையில் தண்ணீர் வைத்து வழிபடுவது ஏன் ? அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? என்று இந்தப் பதிவில் காணலாம்.

பொதுவாகவே, உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கான மூல ஆதாரமே தண்ணீர்தான். அதோடு, தண்ணீரானது சுத்தப்படுத்தும் குணம் மற்றும் செல்லும் இடமெல்லாம் செழுமையாக்கும் பண்பைக் கொண்டதாகவும், எதிர்மறை ஆற்றலை உட்கிரத்து நேர்மறை ஆற்றலைத் தருவதாகவும் பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில், பூஜை அறையில் தண்ணீர் வைத்து கடவுளை வழிபடும்போது, நமது வாழ்வில் செழிப்பையும், நேர்மறை எண்ணங்களையும் கொண்டு வர முடியும் என்று கருதப்படுகிறது. மேலும், நினைத்த காரியம் கைகூடும் என்றும் நம்பப்படுகிறது.

சிலர், துளசி நீரை வைத்தும் வழிபாடு செய்வார்கள். பூஜை முடிந்த பிறகு, இந்த நீரை தீர்த்தமாக அருந்துவார்கள் அல்லது வீட்டின் மேல் தெளிப்பார்கள். இதன் வாயிலாக, வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் அகலும் என்பது ஐதீகம். மேலும், துளசி நீர் மருத்துவ குணம் கொண்டது. எனவே, இதனை அருந்தும்போது, உடலும் மனதும் சுத்தப்படுத்த உதவியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கடவுளுக்கு வாழைப்பழம் மற்றும் தேங்காய் படைத்து வழிபடுவது ஏன் தெரியுமா?
Pooja room

வழிபாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்கு வெள்ளி, தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, செம்பு, மண் போன்ற பொருள்களை பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். இரும்பால் கெட்ட சக்திகளை கிரகிக்க முடியாது என்று நம்பப்படுவதால், இரும்பால் செய்யப்பட்ட பொருள்களை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லப்படுகிறது.

வீட்டில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க, கடவுள் வழிபாட்டிற்காக வைத்த தண்ணீரை தினமும் மாற்ற வேண்டுமாம். இதனால், எதிர்மறை சக்திகள் வீட்டை விட்டு அகலும் என்றும் நம்பப்படுகிறது.

வழிபாட்டிற்கு வைக்கப்படும் தண்ணீரை, வீட்டின் வடக்கு மூலையில் மட்டுமே வைக்க வேண்டுமாம். வீட்டு பூஜை அறையில் வைக்கப்படும் தண்ணீரில் ஒரு ஏலக்காய், ஒரு துண்டு பச்சை கற்பூரம், சிறிதளவு வெட்டிவேர், துளசி இலை போன்ற பொருள்களை போட்டு பூஜை அறையில் வைக்கும்போது அதிலிருந்து வருகின்ற வாசனை உங்கள் வீட்டை கோவில் போல வைத்திருப்பதோடு, மனதை அமைதியாக வைக்கும் தன்மையும் அதற்கு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com