பெண்களின் கர்ப்பப்பை பிரச்னைகளைப் போக்கும் ஸ்ரீ பாலாம்பிகை!

Relieves women's uterine problems Sri Balambigai
Relieves women's uterine problems Sri Balambigai

றைவன் படைப்பில் பெண்கள் கரு தாங்கி உலக இயக்கத்துக்கு முக்கியக் காரணமானவர்களாக இருப்பதால் பெருமைக்குரியவர்களாக மதிக்கப்படுகிறார்கள். ஆனால். தாய்மை எனும் பேறு அடைவதற்கு முன்னும், அடைந்த பின்னும் மாதவிடாய் எனும் பிரச்னைகளை அனைத்துப் பெண்களுமே எதிர்கொள்ளும் சவாலாக உள்ளது.

இதற்குத் தீர்வாக ஆயிரம் மருத்துவ முறைகள் இருப்பினும், அகிலம் காக்கும் இந்த பாலாம்பிகையின் பாதங்களை சரணடைந்தால் பெண்களின் கருப்பை மற்றும் மாதவிடாய் பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும் என்கிறார்கள் பலன் அடைந்த பக்தைகள்.

யார் இந்த அம்பிகை? எங்கே உள்ளது இந்த ஆலயம்?

திருச்சி அருகே உள்ள பேட்டைவாய்த்தலை ஆலயம்தான் அது. இத்தல இறைவன் மத்யார்ஜுனேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவியின் பெயரே பாலாம்பிகை. போரில் பல உயிர்களைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷ நிவர்த்திக்காகவும், பல வருடங்கள் கழிந்தும் கிட்டாத குழந்தை பேறின்மையைத் தீர்க்கவும் இறைவனை வேண்டிய மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு அசரீரி ஒன்று இட்ட கட்டளையின் பேரில் இங்கு அவரால் எழுப்பப்பட்டதுதான்  இக்கோயிலும் அதனருகே உள்ள தீர்த்தமும் என்று கூறுகிறார்கள். இதை உண்மையென்று உரைக்கிறது இங்கு பொறிக்கப்பட்டுள்ள பிரம்மஹத்தி உருவம்.

Poovai Siddhar
Poovai Siddhar

மன்னருக்கு அருளிய இறைவி, மக்களுக்கும் நன்மைகள் விளைய நடத்திய திருவிளையாடலை இனி காண்போம். இதே ஊரில் பொற்றாள பூவாய் சித்தர் எனும் சித்த மருத்துவர் வாழ்ந்து வந்தார். அவர் பலருக்கும் நோய்களைத் தீர்த்து வந்த காலத்தில் இங்குள்ள பெண்களுக்கு ஏற்பட்ட மாதவிலக்கு பிரச்னைகளுக்கு இவர் தந்த எந்தவிதமான மருத்துவமும் பயன் அளிக்கவில்லை. பெண்களின் இந்தப் பிரச்னைகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேதனையில் மனம் வருந்திய பெண்களுக்கு எவ்வகையிலாவது நன்மை செய்ய முடிவெடுத்த சித்தர், அம்பிகையை வேண்டுவதுதான் சிறந்த வழி என்று கருதி, இத்தலத்து இறைவி பாலாம்பிகையிடம் மனமுருகி முறையிட்டார். சித்தரின் வேண்டுதலை ஏற்ற அன்னை, பெண்கள் தனக்காக விரதம் இருந்து நம்பிக்கையுடன் வழிபட்டால் அவர்களின் பிரச்னைகளும் வேதனையும் நீங்கும் எனஅருளினாள்.

பாலாம்பிக்கை அருளியது போலவே, இவரை வழிபடும் பெண்களின் மாதாந்திர பிரச்னைகள் மட்டுமல்லாமல், கர்ப்பப்பை கோளாறுகளும் நிவர்த்தி ஆயின. அம்பிகையிடம் பெண்களுக்காக வேண்டி அருள்வாக்கு பெற்ற பெற்றாள பூவாய் சித்தர் இந்த ஆலயத்தில் இறைவனிடம் ஜோதி வடிவில் இணைந்து அருள்பாலிக்கிறார். மேலும், சித்தரின் உருவம் இறைவனுக்கும் இறைவிக்கும் இடையில் உள்ள தூணிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
யார் அந்த இரு மாதர்?
Relieves women's uterine problems Sri Balambigai

இறைவன், இறைவியை வழிபட்ட பின்பு பெண்கள் தங்களுக்கான மாதாந்திர பிரச்னைகள், கருப்பை உபாதைகள், குழந்தைப் பேறு இல்லாமை போன்றவற்றை பிரார்த்தனை சீட்டில் எழுதி சித்தரின் திருமேனி உள்ள தூணில் கட்டுகின்றனர். இறைவன், இறைவி படத்தை பெற்று ஏழு முதல் ஒன்பது வாரங்களுக்கு வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் பூஜைகள் செய்து வந்தால் தங்களுடைய வேதனைகள் தீர்கின்றன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து மகிழ்ச்சியுடன் பெண்கள் தங்களது நன்றியைத் தெரிவிக்க கோயிலுக்கு வருகின்றனர். இலட்சக்கணக்கில் செலவு செய்தும் தீராத பிரச்னைகளை நீக்கி அருளும் பாலம்பிக்கை தரிசனம் செய்து உடல் நலத்தோடு சகல வளமும் பெற்று வாழ்வோம்.

இந்தக் கோயில் திருச்சியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் உள்ளது. பேட்டைவாய்த்தலை சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com