மன அமைதி, ஆரோக்கியத்துக்கு சத்குரு கூறும் டிப்ஸ்!

சத்குரு
சத்குரு
Published on

வீன காலத்தின் அதிவேகமான வாழ்க்கையில், நம் உடல் நலன் மற்றும் மன நலனுக்கு பல சமயம் நாம் உரிய கவனம் கொடுப்பதில்லை. வாழ்வில் மனம் திடமாக இருந்தாலே நன்றாக சாப்பிடமுடியும். நன்றாக சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்தாலே மனம் தைரியம் அடையும். இரண்டுமே நன்றாக இருக்க நாம் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். எனவே, மனநலம் மேம்பட சுலபமாக செயல்படுத்தக்கூடிய விதமாக சத்குரு வழங்கியுள்ள சில வழிமுறைகளைப் பார்க்கலாம்.

1. இன்றைய உலகில் செயலுக்கும் புத்திக்கும் ஒதுக்கப்பட்டுள்ள சக்தி பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் போவதால், எல்லாவிதமான மன நோய்களும், மன சோர்வும், ஏற்படுகிறது. ஏனென்றால், உணர்ச்சியளவில் போதுமான அளவு தங்களை வெளிப்படுத்தாமலும், உடலை வருத்தாமலும் இருந்தால் மனச்சோர்வில் ஆழ்வது இயல்பானது. எனவே, மனநோய்களால் அவதிப்படுபவர்கள் விளையாட்டிலும், இசையிலும் ஈடுபடலாம்.

2. சமநிலைதான் மிக முக்கிய அம்சம். சமநிலையற்ற தன்மை என்பது மோசமான ஆரோக்கியத்தைக் குறிக்கும். சமநிலை என்பதுதான் ஆரோக்கியம். உடல் ரீதியாக, மன ரீதியாக நீங்கள் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும் என்றால் சமநிலை அவசியம்.

3. கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் ஸ்கிரீன்களே நம் அதிகப்படியான நேரத்தையும் கவனத்தையும் எடுத்துக்கொள்வதால், நம் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்து நம் வாழ்க்கையை நடத்துவது எதுவோ, அதனுடனான தொடர்பை நாம் தொலைத்து வருகிறோம். விடுமுறைக்கு மும்பை அல்லது துபாய் செல்வதற்கு பதிலாக, காட்டு வழியாக நடந்து செல்வதும், ஏதாவது நீர்த்தேக்கத்தில் படகில் செல்வதோ மேலானது. இது ஒருவர் இயற்கையுடன் தொடர்பில் இருக்க உதவுகிறது.

4. சாப்பாடு மிகவும் முக்கியமானதாகும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படாமல் இருக்க சரியான நேரத்துக்கு சரியான உணவை சாப்பிட வேண்டும்.

5. வயிற்றை சுத்தமாக வைத்திருப்பதும் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். பெருங்குடல் சுத்தமாக இல்லையென்றால் மனதளவில் நிறைய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதனால்தான் மன அழுத்தம், மனச் சோர்வு உள்ளிட்டவைகள் ஏற்படுகின்றன. எனவே, எவ்வளவுக்கெவ்வளவு நன்றாக சாப்பிடுகிறோமோ அதே அளவு நம் பெருங்குடலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இதையெல்லாம் கடைபிடித்தாலே நீங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் ஆரோக்கியமானவராக இருக்க முடியும் என சத்குரு தெரிவிக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com