சந்தியா கால நேரத்தில் விளக்கேற்றினால் தீரும் பிரச்னைகள் என்னென்ன தெரியுமா?

sandhya kaala Nerathil Vilakketrinaal Theerum Prachanaigal Theriyumaa?
sandhya kaala Nerathil Vilakketrinaal Theerum Prachanaigal Theriyumaa?https://tamil.webdunia.com
Published on

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றுவது மிகவும் அதிர்ஷ்டமான பலன்களைக் கொடுக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை. எல்லோராலும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கேற்றுவது கடினமான காரியம். ஆனால், இதை செய்பவர்களுக்கு நூறு சதவீதம் நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது மட்டும் உறுதி. இந்த நேரத்தில் விளக்கேற்றுபவர்களுக்கு தேவர்களின் ஆசீர்வாதமும் தெய்வங்களின் அருளும் கிடைப்பதாக ஐதீகம்.

தவிர்க்க முடியாத காரணங்களால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்துகொள்ள முடியாது என்றால், அதற்கு பதிலாக வேறு என்ன செய்யலாம்?

பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு இணையாகக் கருதப்படுவது சூரியன் மறையும் நேரமாக இருக்கும் சந்தியா காலமாகும். கிட்டத்தட்ட சந்தியா காலமும் பிரம்ம முகூர்த்ததுக்கு இணையானதுதான். சந்தியா காலம் என்பது மாலை வேளையில் மூன்றில் இருந்து ஆறு மணி வரை கொண்ட காலமாகும். இதில் இறுதியாக இருக்கும் ஒரு மணி நேரம் மிகவும் விசேஷமானது. மாலையில் தினமும் ஐந்திலிருந்து ஆறு மணிக்குள்ளாக வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது சாஸ்திர நியதி. வெள்ளிக்கிழமைகளில் ஆறு மணிக்கு மேல்தான் சிலர் விளக்கு ஏற்றுவார்கள். இப்படிச் செய்வதே விட, ஆறு மணிக்குள்ளாகவே நாம் விளக்கு ஏற்றி விடுவது மிக மிக நல்லது. ஐந்திலிருந்து ஆறு மணிக்குள் தினமும் பூஜை அறையில் மூன்று விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுவது ராஜயோகத்தைக் கொடுக்கும்.

சந்தியா கால நேரத்தில் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் அத்தனை தெய்வங்களின் ஆசீர்வாதமும் உங்களுக்குக் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தினமும் மாலை வேளையில் ஐந்திலிருந்து இறை வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தால் உங்களுக்கு இருக்கும் அத்தனை கஷ்டங்களும் நீங்கி நல்ல விஷயங்கள் நடக்கத் துவங்கும்.

இதையும் படியுங்கள்:
மலச்சிக்கல் நீங்க ஐந்து எளிய வீட்டு வைத்தியக் குறிப்புகள்!
sandhya kaala Nerathil Vilakketrinaal Theerum Prachanaigal Theriyumaa?

இந்த வழிபாட்டை நீங்கள் செய்யச் செய்ய உங்களுக்காக அவற்றின் மகத்துவத்தை உணரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இப்படி சந்தியா கால வேளையில் ஏற்றும் விளக்கானது மஞ்சள் திரியை கொண்டு ஏற்றுவது மிக மிக நல்ல பலன்களை கொடுக்கவல்லது. ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் ஒவ்வொரு நேரத்தில் திரியை மாற்றி ஏற்றுவது வழக்கம். அந்த வகையில் மஞ்சள் நிறத் திரியானது துன்பங்களை போக்கக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது. சாதாரண திரியில் மஞ்சள் தோய்த்து காய வைத்து பின்னர் பயன்படுத்தினால் கஷ்டங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுபவர்கள் ஐந்து விளக்கில் இதுபோல் மஞ்சள் திரியை கொண்டு தீபம் ஏற்றினால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த இரண்டு வேளைகளும் இறைவழிபாட்டிற்குரிய மிக மிக விசேஷமான காலமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com