சிவ அபிஷேக பொருட்களும் பலன்களும்!

Shiva Abhishek products and benefits
Shiva Abhishek products and benefitshttps://www.virakesari.lk
Published on

காசிவராத்திரி அன்று ஈசனுக்கு அபிஷேக திரவியங்களான சில பொருட்களை வாங்கி அருகில் உள்ள சிவாலயங்களில் கொடுக்க பல நன்மைகளைப் பெறலாம். சிவபெருமானுக்கு உகந்த பால், பன்னீர், சந்தனம், வில்வ பத்ரம் என அபிஷேக அலங்கார திரவியங்களை வாங்கிக் கொடுக்க அதனால் உண்டாகும் பலன்களை இந்தப் பதிவில் காணலாம்.

1. விபூதி அபிஷேகம்: விபூதியால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் சந்தோஷமான வாழ்க்கையும், மோட்சமும் கிடைக்கும்.

2. கரும்புச்சாறு அபிஷேகம்: ஈசனை கரும்புச்சாறினால் அபிஷேகம் செய்ய, நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.

3. வலம்புரி சங்கு அபிஷேகம்: வலம்புரி சங்கில் மகாலட்சுமியும், குபேரனும் வாசம் செய்வதாகக் கூறப்படுகிறது. எனவே, வலம்புரி சங்கு கொண்டு ஈசனுக்கு அபிஷேகம் செய்ய சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

4. பஞ்சாமிர்த அபிஷேகம்: பல வகையான பழங்கள், தேன், கல்கண்டு ஆகியவற்றை கலந்து பஞ்சாமிர்தம் செய்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய  உடலும் உள்ளமும் வளம் பெறுவதுடன் வலிமையும் பெறலாம்.

5. தேன் அபிஷேகம்: தேன் கொண்டு சிவனை அபிஷேகம் செய்ய, குரல் இனிமையும், இசையில் வல்லமையும் பெறலாம்.

6. பால் அபிஷேகம்: பால் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்ய நோய் நொடிகள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

7. தயிர் அபிஷேகம்: தயிர் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்ய மழலைச் செல்வங்களைப் பெறலாம்.

8. நெய் அபிஷேகம்: நெய் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய முக்தி பெறலாம்.

9. இளநீர், எலுமிச்சம் பழச்சாறு அபிஷேகம்: இவற்றைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்ய பகைவர்களின் அச்சம் நீங்கி இன்பமான வாழ்வோடு அஞ்ஞானம் நீங்கப் பெறலாம்.

10. சர்க்கரை அபிஷேகம்: சர்க்கரையால் ஈசனை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மன நிறைவு உண்டாகும்.

11. பசு நெய் அபிஷேகம்: பசு நெய் கொண்டு சிவனை அபிஷேகிக்க வாழ்வு இன்பமயமாக கவலைகள் நீங்கி சந்தோஷம் நிலவும்.

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் வீட்டை ‘குளுகுளு’வென வைத்திருப்பது எப்படி?
Shiva Abhishek products and benefits

12. கங்கை நீர் அபிஷேகம்: தூய்மையான கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்ய, மனக் கவலைகள் நீங்கி, பயம் நீங்கி மன நிம்மதி உண்டாகும்.

13. சந்தனம், பன்னீர் அபிஷேகம்: சந்தனம், பன்னீர் கலந்து சிவபெருமானை அபிஷேகிக்க இறைவன் மீதான பக்தி அதிகமாகும். நற்செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சிவராத்திரி அன்று சிவாலயங்களில் நான்கு கால பூஜைகள் நடைபெறும். அப்போது சிவாலயத்தில் நடக்கும் அபிஷேகத்தை காண்பதும், கண் விழித்து சிவ ஸ்துதி, பாராயணங்கள் செய்வதும் சிறந்த பலனைத் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com