சிவ ரூப சப்த முனீஸ்வரர்!

சிவ ரூப சப்த முனீஸ்வரர்!
Published on

லகத்தைக் காக்கும் பொருட்டு பூமியில் நீதி, வளம், மழை, தொழில் செழிக்க, தீய சக்திகளை அழிக்க வீரபத்திரரின் அவதாரமாக சிவபெருமான் தன்னில் இருந்து சப்த முனிகளை தோற்றுவித்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கட்டளைகளை அருளி, உலக மக்களைக் காக்கப் படைத்ததாகப் புராணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த சப்த முனீஸ்வரர்களைக் குறித்துக் காண்போம்.

சிவமுனி: சிவபெருமானின் முகத்தில் இருந்து தோன்றியதால் சிவாம்சம் பொருந்திய தெய்வமாக சிவமுனி. இவர் அபய மூர்த்தியாக பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தருகிறார்.

மஹாமுனி: அளவில்லாத தெய்வ சக்தி உடையவர் இவர் என்பதால் தீயவற்றை அழித்துக் காக்கும் மஹாசக்தியாக, தொழில் வளம் பெருக்கும் சக்தியாக விளங்குகிறார். வியாபாரம், வாழ்வில் ஏற்படும் தடைகளை விலக்கி, நம்பிக்கையோடு இவரை வேண்டுபவர்க்கு வேண்டுதலை நிறைவேற்றி தரும் தங்கமுனி இவர் ஆவார்.

வாழ்முனி: வனங்களில் வசிக்கும் காபாலிகர் இனத்தவர் போற்றி வணங்கும் தெய்வம் வாழ்முனி.

தவமுனி: தேவர்கள், ரிஷிகள், யாத்திரீகர்கள் இவர்களின் வழியில் ஏற்படும் தீமைகள் விலக்கிக் காக்கும் தெய்வமாக விளங்குகிறார் தவமுனி.

தருமமுனி: தருமச் செயல்களைக் காத்து, தீய செயல்களை அழிக்கும் தெய்வம் தருமமுனி.

ஜடாமுனி: வனங்களைக் காப்பவர் இவர். ருத்ராட்ச மாலைகள் அணிந்து இருப்பவர். நூல்கள், ஓலைச்சுவடிகளைப் படைத்துக் காக்கும் தெய்வம் ஜடாமுனி.

நாதமுனி: தேவ கணங்களையும், பூத கணங்களையும் காத்து ரக்ஷிக்கும் தெய்வம் நாதமுனி.

சப்த முனிகளில் இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், சிவமுனியும், மஹாமுனியும் பல பெயர்களில் எல்லை காவல் தெய்வங்களாகவும், ஊர் தெய்வங்களாகவும் வழிபடப்பட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com