மறந்தும் கூட வாழ்வில் செய்யக் கூடாத பாவங்கள்!

மகா பாவங்கள்
Great sinshttps://www.lawnn.com
Published on

னிதனாகப் பிறந்துவிட்டால் நிச்சயமாக அறிந்தோ அறியாமலோ ஏதாவது ஒரு பாவத்தை செய்திருப்பார்கள். பாவத்தின் விளைவாக அவர்கள் படும் துன்பங்கள் அளவை மீறும்போது செய்த பாவத்தை நினைத்து வேதனைப்பட செய்கிறார்கள். இதைத்தான், ‘கர்ம விதி பயன்’ என்பார்கள்.

‘கர்ம விதி பயன்’ கெட்டதை மட்டுமல்ல, நீங்கள் செய்த நல்லதையும் சேர்த்துதான் குறிக்கிறது. எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுக்கவும் முடியும். நல்லது செய்தால் நல்ல விதி பயனைப் பெறுவீர்கள். நல்லது சரி, ஆனால் நாம் செய்த பாவங்களில் பெரிய பாவங்களாக இந்த 3 விஷயங்களைச் சொல்கிறார்கள் பெரியோர். இந்தப் பாவங்களுக்கு பரிகாரமே இல்லை என்றும் இதனால் வரும் துன்பத்தை இந்தப் பிறவியிலேயே அனுபவித்தே ஆக வேண்டும் என்கிறது விதி. அவை என்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

பெற்றோர்களை கைவிடுதல்: ‘பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு’ என்று கூறுவார்கள். பெற்றோர்கள் என்பவர்கள் தெய்வத்திற்கு நிகராகப் பார்க்கப்பட வேண்டியவர்கள். பிள்ளைகளுடைய மனம் பெற்றோர்களை ஏற்காவிட்டாலும், பெற்றோர்களுடைய மனம் பிள்ளைகளை சுற்றித்தான் இருக்கும். இது இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு விஷயம். இப்படியான பெற்றோர்களை எந்த ஒரு மனிதன் மதிக்காமல், உதாசீனப்படுத்துகிறானோ? அவன் விமோசனமே இல்லாத பாவத்தை சுமக்க வேண்டிய சூழ்நிலை வரும்.

பிள்ளைகள் பெற்றோர்களுக்கு செய்யும் பாவங்களுக்கு எந்தப் பரிகாரம் செய்தாலும் விமோசனம் என்பது கிடையாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. உங்களை இந்த பூமிக்குக் கொண்டு வந்தவர்கள் உங்கள் பெற்றோர்கள்தான். அதை மறந்து சுயநலமாக செயல்பட்டால் அதற்கான தண்டனையும் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர வேண்டும். பெற்றோர் மீதான வெறுப்புக்கு ஆயிரம் காரணங்கள் கூறினாலும் அதை இறைவன் ஏற்பதில்லை.

உயிரை வதைத்தல்: எந்த ஒரு உயிரையும் கொல்லக் கூடாது என்பதுதான் இறைவன் நியதி. இறைவனால் படைக்கப்பட்ட எந்த ஒரு உயிரையும், மனிதன் கொல்லக்கூடாது என்பது மனிதனுக்கு வகுக்கப்பட்ட விதி. இந்த விதியை மீறி ஒரு மனிதன், இன்னொரு உயிரை கொல்லும்பொழுது அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. பிரம்மஹத்தி தோஷம் நன்றி மறப்பவர்களுக்கும், பசுவை வதைப்பவர்களுக்கும், குரு துரோகம் செய்பவர்களுக்கு, அதர்ம வழியில் நடப்பது, சொத்தை அபகரிப்பது, பெற்ற தாயை அவமானப்படுத்துவது, உணவில்லாமல் பட்டினி கிடக்கச் செய்தது போன்ற செயல்களை செய்பவர்களுக்கு இந்த தோஷம் உண்டாகிறது.

இதையும் படியுங்கள்:
இரத்த விருத்தியை அதிகரிக்கும் லோங்கன் பழத்தின் நன்மைகள்!
மகா பாவங்கள்

இதில் பிற உயிரைக் கொல்லும் பாவம் புரிபவர்களுக்கு எந்தப் பரிகாரம் செய்தாலும் அவர்களுக்கு விமோசனம் என்பது கிடையாது. அந்தப் பிறவியில் அல்லது அதற்கு அடுத்த பிறவிகளில் அவருடைய வாழ்வு சாவதே மேல் என்கிற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துவதாக நிச்சயம் அமையும். அந்த அளவிற்கு வலி நிறைந்த வாழ்க்கையை தரக்கூடியது இந்த தோஷம்.

வார்த்தைகளால் காயப்படுத்துதல்: ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல் என்பதும் பாவம்தான். அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டு விட்டு, என்னதான் மன்னிப்பு கேட்டாலும், பேசிய வார்த்தைகளை மீண்டும் சரி செய்துவிட முடியாது. அந்த வார்த்தைகள் காற்றில் அலைந்துகொண்டே இருக்கும். அவர்களுடைய மனதை விட்டு எப்பொழுதும் நீங்காது போய்விடும். இதனால்தான் ஒவ்வொரு வார்த்தைகளையும் நிதானமாகப் பேசப் பழகிக்கொள்ள வேண்டும். வாய் இருக்கிறது என்பதற்காக இஷ்டத்திற்கு பேசினால், அந்தப் பாவப் பயனை நீங்கள்தான் சுமக்க வேண்டியது வரும். மாதா, பிதா, குரு, தெய்வம் இந்த நான்கு பேரை வார்த்தைகளால் கடுமையாக நீங்கள் தாக்கினால், அதனால் வரும் துன்பங்களிலிருந்து மீள எந்தப் பரிகாரம் செய்தாலும் உங்களுக்கு விமோசனம் கிடைக்காது என்பது விதி.

இந்த மூன்று பாவங்களை செய்பவர்களுக்கு, இந்தப் பிறவியிலேயே அதற்கான தண்டனையும் கிடைத்து விடுகிறது. இந்தப் பாவங்களுக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க கோயிலுக்குச் செல்வது, தான தர்மங்கள் செய்வது போன்ற எத்தனை முயற்சிகள் நீங்கள் செய்தாலும், அதில் தோல்விதான் கிடைக்கும். இந்தப் பாவத்தின் பலன்களை மாற்ற படைத்த கடவுளாலும் முடியாது என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால் வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com