தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற 7 விநாயகர் கோயில்கள் எங்கு உள்ளன, அவற்றின் சிறப்புகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்...
இங்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று இரவு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் கோயில் உட் பிரகாரத்தில் வலம் வருவார். மேலும் திருக்கார்த்திகை அன்று விநாயகரும், சந்திரசேகர பெருமானும் திருவீதி பவனி வருவர். விநாயகர் சதுர்த்திக்கு 9 நாட்கள் முன்பு காப்புக்கட்டி கொடியேற்றம் நடக்கும். 10-ம் நாள் காலையில் தீர்த்தவாரி பூஜையும், ராட்சத கொழுக்கட்டை நெய்வேத்தியமும் சுவாமிக்கு படைக்கப்படும்.
சங்கடஹர சதுர்த்தி, வளர்பிறை சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, பவுர்ணமி, அமாவாசை மற்றும் மார்கழி மாதம் 30 நாட்களும் இங்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த கோயிலில் அரசமரத்தடியில் அமர்ந்துள்ள ராஜ கணபதிக்கு இடது பக்கம் சிவபெருமானும், வலது பக்கம் கிருஷ்ண பெருமானும் உள்ளனர். மேலும் மேற்கூரையிலும் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த கோயிலுக்கு வருபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த கோயிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் கரும்பாயிரம் விநாயகர் மூத்த விநாயகராக உள்ளது இந்த கோயிலின் சிறப்பு. கும்பேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மறக்காமல் அருகில் உள்ள கரும்பாயிரம் விநாயகரையும் வழிபட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி, ஆங்கிலபுத்தாண்டு, தமிழ்புத்தாண்டு, பொங்கல் பண்டிகை காலத்தில் இந்த விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த கோயிலின் ஆயிரங்கால் மண்டபம் சிறப்பு வாய்ந்தது. 275 அடி உயரம் கொண்ட மலை மீது இந்த விநாயகர் அமர்ந்துள்ளார். கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் ஏறி பக்தர்கள் உச்சி விநாயகரை வழிபடுகின்றனர். 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலில் அமைந்துள்ள தாயுமானவர் சன்னதி, தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கடஹரசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள கோயிலில் விநாயகர் நந்தி பெருமானுடன் இருப்பது சிறப்பு வாய்ந்தது. இங்கு மூலவர் விநாயகர் இல்லை என்பதும், மூன்று வாசல் கொண்ட சிறிய குகை என்பதும் குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை கிரிவல பாதையில் குபேர லிங்கம் அருகில் இந்த விநாயகர் உள்ளார். இந்த விநாயகரை வழிபட்டால் இடுப்பு, தலை, கை, கால்களில் உள்ள வலிகள் குணமாகும் என்பது ஐதீகம்.
இங்கு விநாயகர் லிங்கம் வடிவில் காட்சியளிக்கிறார். இங்குள்ள விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. பிறர் பொருளை அபகரித்தவர், மற்றும் ஏமாற்றுபவர்களை இந்த கோயிலுக்கு அழைத்து வந்து சத்தியம் வாங்கும் நடைமுறை இன்று வரை உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே படித்துறை விநாயகர் கோயில் அமைந்துள்ளது. விநாயகர் ஜடாமுடியோடு வித்தியாசமாக இந்த கோயிலில் காட்சி தருகிறார். மாங்கல்ய பாக்யம் வேண்டுவோர் வழிபட சிறந்த கோயிலாகும். விநாயகர் சதுர்த்தி, மற்றும் பிரதோஷ நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.