அருள் பெருக்கும் ஆன்மிகத் தகவல்கள் ஐந்து!

அருள் பெருக்கும் ஆன்மிகத் தகவல்கள் ஐந்து!
Published on

ன்மிகத்தில் ஆதிசங்கரர் ஸ்தாபித்த அன்னை சக்தியின் அம்சம் கொண்ட ஸ்ரீ சக்கரத்துக்கு விசேஷ சக்திகள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. வணங்குவோருக்கு தடைகளை நீக்கி வாழ்வில் ஐஸ்வர்யம் நல்கும் ஸ்ரீ சக்கரத்தை ஆதிசங்கரர் தமிழ்நாட்டில் மக்களின் நலனை முன்னிட்டு பல ஆலயங்களில் ஸ்தாபிதம் செய்துள்ளார். அதிலும் குறிப்பாக, காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், திருக்குற்றாலத்தில் பராசக்தி பீடம், சிதம்பரத்தில் சிவசக்கரமும் ஸ்ரீ சக்கரமும் இணைந்த சம்மேளன சக்கரம், சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயத்தில் உள்ள மகாமேரு ஸ்ரீ சக்கரம் போன்றவை சிறப்பு மிகுந்தவைகளாக வணங்கப்படுகின்றன.

லை மேல் அமர்ந்த தெய்வங்கள் தனிச்சிறப்பு மிக்கவைகளாக வணங்கப்படுகின்றன. அப்படி, தொண்டை வளநாட்டில் உள்ள மலைக் கோயில்களான, திருவண்ணாமலை – அருணாச்சலம், திருத்தணிகைமலை – தணிகாசலம், சோளிங்கர் - கடிகாசலம், திருவேங்கடமலை – வேங்கடாசலம், திருக்காளத்திமலை – பிரம்மாசலம் என வழங்கப்படுகின்றன.

காசிக்கு செல்வதை இந்துக்கள் புனிதமானதாகக் கருதுகின்றனர். காசிக்கு சென்றால் செய்த பாவங்கள் தொலைந்து, மரணத்தின்போது முக்தியடைந்து இறைவனிடம் சேர்வதாக நம்பிக்கை. காசிக்கு செல்ல முடியவில்லையே எனும் கவலை வேண்டாம். காசிக்கு ஒப்பான தலங்கள் தமிழ்நாட்டிலேயே உண்டு. அவை: திருவையாறு, திருமயிலாடுதுறை, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருசாய்காடு என்பவையாகும்.

தெய்வங்களில் முழுமுதற்பொருளான வினாயகப்பெருமான் பஞ்சபூத அம்சங்களைக் கொண்ட மரங்களில் வாசம் செய்கிறார். ஆகாய அம்சமாக அரசமரத்திலும், வாயு அம்சமாக  வாதநாராயண மரத்திலும், அக்னி அம்சமாக  வன்னி மரத்திலும், நீர் அம்சமாக நெல்லி மரத்திலும், மண் அம்சமாக ஆலமரத்திலும் குடிகொண்டு அருள்பாலிக்கிறார் என்கிறது புராணம்.

ன்மிகத்தில் துறவு நிலை என்பது, கடமைகளைத் துறந்து, உறவுகளை விட்டுப் பிரிந்து யாருமே இல்லாத காடுகளுக்குச் செல்ல வேண்டுமென்பதில்லை. பலனை எதிர்பாராது ஆத்மார்த்தமாக பிறருக்கு நன்மை விளையும் நற்செயலில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொள்வதே உண்மையான துறவின் அர்த்தம் என்கின்றனர் மகான்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com