

ஒரு விஷயம் தெரியுமா? கோவில் தவிர எங்கும் இந்த எலுமிச்சையை கையால் வாங்கக் கூடாது. எலுமிச்சையைப் பற்றிய முக்கியமான விஷயம் பற்றிதான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம்.
எலுமிச்சையை தேவபழம் என்று கூறுவார்கள். இதற்கு தெய்வபக்தி உண்டு. மந்திரங்களை கிரகிக்கும் சக்தி இதற்கு உண்டு. இதே சக்தி மாவிலைக்கும் உண்டு. இன்றைய காலக்கட்டத்தில் ஒரு மனிதன் நிச்சயமாக இன்னொரு மனிதரைப் சார்ந்து தொடர்பில் இருந்துதான் பயணிக்க வேண்டி யிருக்கிறது. இப்படி வாழும் இந்த சூழலில் நாம் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் யார் என்று நமக்குத் தெரியாது.
அதேசமயம் நல்லமுறையில் பழகிக்கொண்டு நமக்குக் கெடுதல் செய்பவர்களையும் நாம் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதனால் சில விஷயங்களை நாம் தவிர்த்துக் கொள்வதுதான் நம்மை நாம் பாதுகாக்கும் சிறந்த வழியாக கருதப்படுகிறது. இந்த வகையில் எலுமிச்சை பழத்தை மட்டும் நாம் யார் கையில் இருந்தும் வாங்கிக் கூடாது என்று ஒரு ஐதீகம் உள்ளது. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.
எலுமிச்சை பழமானது தீய சக்திகளை தன்னுள் ஈர்த்து நல்ல சக்திகளை வெளியிடும் தன்மையை உடையது. அதனால்தான் கோவிலிலிருந்து வாங்கி நம் வீட்டில் வைக்கும் பழக்கம் இருக்கிறது. இப்படி வைக்கும்போது நம் வீட்டில் இருக்கும் தீய சக்திகளை தன்னுள் வாங்கிக்கொண்டு நல்ல சக்திகளை வெளியிடும். இது எல்லோருக்கும் தெரியும். இந்த பழமானது வீட்டில் வைத்தபிறகு அழுகிவிட்டால் வீட்டிற்கு நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. அப்படி அழுகிவிட்டால் தீயசக்திகளை அது தன்னுள் ஈர்த்து கெட்டது என்று அர்த்தம்.
அதை அகற்றிவிட்டு அருகில் உள்ள அம்மன் கோவிலிலிருந்து வேறு பழத்தை வாங்கி வைக்கலாம். எலுமிச்சை பழத்தை இன்னொருவர் கையிலிருந்து வாங்கும்போது அவர் எந்த எண்ணத்தில் உங்களுடன் பழகுகிறார் என்பது உங்களுக்குத் தெரியாது. நல்ல முறையில் பழகி இருந்தால் அந்த பழம் உங்கள் கையில் வரும்போது நல்ல அதிர்வலைகளை கொடுத்து உங்களுக்கு முன்னேற்றத்தையும் உயர்வையும் தரும். இதுவே கெட்ட எண்ணத்தோடு இருப்பவர்களிடமிருந்து உங்கள் கைக்கு வந்தால் அந்த அதிர்வலைகள் உங்களைத் தாக்கும்.
அதேசமயம் நீங்கள் மற்றவர்களுக்கு உங்கள் கையால் கொடுக்கும் போது உங்களின் நல்ல ஆற்றலானது உங்களை விட்டுச் செல்லும் வாய்ப்பும் உண்டு. எனவேதான் எலுமிச்சை பழத்தை பொறுத்தமட்டில் கோவில் பிரசாதமாக வரும் குரு ஸ்தானத்தில் இருப்பவர்களின் கையால் மட்டுமே வாங்கலாம்.
கடைகளில் கூட எலுமிச்சையை கூடையில் வைத்திருப்பவர்கள் கையால் எடுத்துக்கொடுக்க மாட்டார்கள். நம்மையே எடுத்துக்கொள்ளச் சொல்வார்கள். எந்த சூழலிலும் எவர் கையிலும் பழத்தை வாங்கி பயன்படுத்தாதீர்கள் கடைக்குச் சென்றால்கூட நீங்களே எடுங்கள். இதன் மூலம் உங்களுக்கு எந்த கெடுதலும் நேராமல் தடுக்கலாம்.
ஒரு பொருள் எங்கிருந்து வருகிறது என்பதைப் பொறுத்துதான் அதற்கான பலன் உண்டு. கோவிலில் பிரசாதமாக இருக்கும் பொருள் இன்னொருவர் கையிலிருந்து நமக்கு வரும்போது தீமை தரும் பொருளாக மாறுகிறது. இந்த விஷயத்தை கவனத்தில் வைத்து செயல்படுங்கள். மேற்கூறிய வற்றலை எலுமிச்சம் பழத்தை வாங்கும்போது நினைவில் கொள்ளுங்கள்.