அகம்பாவம் அழிக்கும் வாழ்வு: 'நான்' என்ற எண்ணத்தை விடுவது எப்படி?

Sri Chandrasekharendra Swamigal
Sri Chandrasekharendra Saraswathi Shankaracharya Swamigal
Published on

பொதுவாகவே மனிதனிடம் இறை நம்பிக்கை இருக்கவேண்டும். அவனன்றி ஒரு துரும்புகூட அசையாது என்பது உலகமே அறிந்த ஒன்று. முழு நம்பிக்கையுடன் இறைபக்தியுணர்வோடு   பகவானை வேண்டினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

எத்தனை இன்னல்கள் வந்தாலும் இறைவன் எனக்கு சாதகமாக இல்லை. நான் வேண்டிக்கொண்ட காாியம் நிறைவேறவில்லை, இனி கடவுளை கும்பிடமாட்டேன் என சொல்லும் நபர்களும்  உண்டு. அது அவர்களின் அவநம்பிக்கையின் வெளிப்பாடே!

இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. பணம் பணம் என அதைத்தேடிக்கொண்டே ஓடுபவனுக்கு இறைவனை கும்பிட நேரம் இருக்காது. அதேபோல்தான் தர்மங்கள் செய்ய நினைப்பவர்கள் உரிய காலத்தில் செய்து விடவேண்டும், தான தர்ம விஷயத்தில் தாமதம் தவிா்க்கப்படவேண்டும்.

நான், நான், நான் என்ற அகம்பாவம் மனிதனிடம் இருக்கவே கூடாது, நம்கையில் எதுவும் இல்லை. அனைத்திற்கும் ஆண்டவன்தான் அவரது  வேலையைச் செய்கிறாா்.

இதைத்தான் ஜகத்குரு காஞ்சிகாமகோடி ஶ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாா்ய ஸ்வாமிகள் தனது அருளுரையில். கடவுள் இரு கைகளைக் கொடுத்திருக்கிறாா், ஒரு கையால் ஈஸ்வரன் காலைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் கடமையைச் செய்யுங்கள். 

பணத்திற்காக அலையோ அலையயென அலைந்து கொண்டிருப்பவனுக்கு கடவுளைப்பற்றி சிந்திப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை.

ஒரு சிறு புல்லைக்கூட நம்மால் சிருஷ்டிக்க முடியாது, ஆனால் கடவுள் இந்த பரந்த  உலகத்தையே நமக்காக படைத்திருக்கிறாா்.

எமன் மனிதனின் உயிரை எப்போது வேண்டுமானாலும் பறித்து விடலாம். அதனால் தர்மம் செய்வதில் காலதாமதம் செய்யக்கூடாது. 

இதையும் படியுங்கள்:
குருவாயூரப்பன் முன் ஏன் குன்றிமணி உருளி இருக்கிறது தெரியுமா?
Sri Chandrasekharendra Swamigal

சேவை செய்ய விரும்புவா்களுக்கு மனதில் அமைதியும் இதழில் புன்னகையும் எப்போதும் அவசியம். என சொல்லியிருக்கிறாா்.

இது போல அருமையான விஷயங்களை நாம் வாழ்வில் கடைபிடித்து இறைநம்பிக்கையோடு  தொண்டுள்ளம் கொண்டு தா்ம நெறி தவறாமல்கடைபிடித்து  வாழ்வோமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com