கடன் தீர்க்கும் தாந்த்ரீக பரிகாரம்!

கடன் தீர்க்கும் தாந்த்ரீக பரிகாரம்!

ல்லோரும் ஓடி ஓடி உழைப்பது பணம் சம்பாதிக்கத்தான். ஆனால், சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதி கடனை அடைக்கவே போய் விடுகிறது. கடன் என்றால் ஒருவரிடம் பணமாக வாங்கிய கடன் மட்டும் கிடையாது. பொருளாக வாங்கிய கடன், வீட்டுக் கடன், வாகனங்கள் வாங்கிய கடன் இவையெல்லாம் கூட கடன்தான். இப்படி எந்த வகையான கடன்களை அடைக்க நீங்கள் முயற்சி எடுத்தாலும் அது தோல்வியில் முடிகிறது என்றால், இந்த ஒரு சின்ன தாந்த்ரீக பரிகாரம் செய்யலாம் என்று ஆன்மிகம் சொல்கிறது.

கடன் அடைய வேண்டுமென்றால் அதற்கு முதலில் பண வரவு அதிகரிக்க வேண்டும். பண வரவு அதிகரித்தால் கடன் அடைந்து விடுமா என்றால் அதுவும் முடியாது. ஏனென்று கேட்டால், சிலரிடம் வாங்கிய கடனை உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அதைத் திருப்பிக் கொடுப்பதற்கான நேரம் காலம் அமையாது. இந்த பரிகாரத்தை செய்யும்போது உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். அப்படி வரும் பணம் உங்கள் கடனை அடைக்கப் பயன்படும்.

இந்தப் பரிகாரத்தைச் செய்ய நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை. இந்தப் பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று எப்போது நீங்கள் நினைக்கிறீர்களோ அன்றே உங்கள் கடன் தீர வழி பிறந்து விட்டது என்று அர்த்தம். இந்தப் பரிகாரத்துக்கு ஒரு அல்லிப்பூவும், கரும்புச் சாறும் வேண்டும். இந்த கரும்பு சாறில் இஞ்சி, எலுமிச்சை எதுவும் கலக்காமல் வெறும் கரும்பு சாறு மட்டும் கடையில் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

முதலில் சாம்பிராணி தூபம் போடும் தூபக்காலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் சிரட்டையை பற்ற வைத்து நெருப்பு கங்குகளை தயார் செய்து கொள்ளுங்கள். அதில் சுத்தமான கரும்புச் சாரை ஊற்றுங்கள். (கரும்பு சாறு கிடைக்காத பட்சத்தில் சுத்தமான தேனையும் இதற்குப் பயன்படுத்தலாம்). கரும்பு சாறு ஊற்றும்போது அதிலிருந்து வரும் புகையில் அல்லி பூவை காட்ட வேண்டும். இப்படிச் செய்யும்போது அல்லி பூ வாடி விடும். அடுத்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் வாடிய அல்லி பூவை போட்டு மூடாமல், உங்கள் பூஜை அறையில் அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். பாட்டிலில் இருக்கும் இந்தப் பூவுக்கு தினமும் தீபாராதனை காட்ட வேண்டும். இதைத் தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும். பெண்கள் வீட்டு விலக்கான நாட்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அந்த நாட்களை தவிர்த்து விட்டு மறுபடியும் தொடர்ந்து செய்யலாம். 48 நாட்கள் இந்த மலரை வைத்து பூஜை செய்த பிறகு 48வது நாள் இந்த அல்லி மலரை ஓடும் நீரில் விட்டு விடுங்கள்.

இந்தப் பரிகாரம் மிகவும் எளிமையானதுதான். ஆனால், 48 நாட்கள் கொஞ்சம் சிரத்தையாக செய்ய வேண்டும். இதை காலையில் எழுந்தவுடன் செய்து விட வேண்டும். இந்தப் பூவை வீட்டின் பூஜையறையில் வைத்தாலும் சரி, பணம் வைக்கும் இடத்தில் வைத்தாலும் சரி. இந்த மலரை வைத்து பூஜை செய்யும்போது பண வரவு அதிகரிக்கும். பண வரவு இருந்தால்தானே கடனை அடைக்க முடியும். அது மட்டுமின்றி, பண வரவு மேலும் பெருகுவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இதுவரை நீங்கள் அடைக்க முடியாமல் திணறிய கடனை கூட அடைத்து விடலாம். கடனை அடைக்க எத்தனையோ பாடுபட்டும் முடியாதவர்கள் இந்த எளிய பரிகாரத்தைச் செய்தால் கடன் அடைவதற்கான வழி நிச்சயம் பிறக்கும் என்று சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com