மூன்றாவது கண்ணைத் திறக்கும் ரகசியக் கல்: சித்தர்கள் பயன்படுத்திய அஞ்சனக்கல்லின் மகிமை!

Benefits of Anjana kal
Anjana kal
Published on

பூமியில் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பொருட்களில் நிறைய சக்திகள் இருக்கின்றன. அதை அறிந்து சரியான முறையில் பயன்படுத்தினால் பல நன்மைகளை நாம் அடையலாம். அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்றுதான் அஞ்சனக்கல் ஆகும்.

அஞ்சனக்கல்லை பற்றி, ‘போகர் 12000’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்லை அக்காலத்திலேயே சித்தர்கள் பயன்படுத்தி பலனடைந்துள்ளனர். அஞ்சனக்கல்லை, ‘சுர்மா கல்’ என்றும் அழைப்பார்கள். இந்தக் கல் பஞ்சாப், ஆந்திரா, தென் தமிழகத்திலும் கிடைக்கிறது. இவை இலகுவாக உடையும் தன்மையை உடையது. ஆனால், தண்ணீரில் கரையாது.

இந்தக் கல்லை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம். அவை: சவ்வீராஞ்சனம், ரசாஞ்சானம், ஸ்ரோதாஞ்சனம், நீலாஞ்சனம், ரத்தாஞ்சானம், புஷ்பாஞ்சனம் ஆகியவையாகும். இதில் நீலாஞ்சனக்கல் சுலபமாகக் கிடைக்கக்கூடியது. மருத்துவத்தில் வெளிப்பூச்சுக்கு அதிகம் பயன்படுகிறது. ஜன்னி, மேகம், நாவறட்சி, இரத்த பாதிப்பு, கண் வலி போன்ற நோய்களை குணமாக்க இது பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தீராத வினைகளையும் தீர்க்கும் ‘மஞ்சள் தேங்காய்’ பரிகார வழிபாட்டின் ரகசியம்!
Benefits of Anjana kal

அஞ்சனக்கல் புருவ மத்தியில் உள்ள மூன்றாவது கண் என்று சொல்லப்படும் ஆக்ஞா சக்கரத்தை திறப்பதற்கு வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இஸ்லாமியர்கள் இந்த சுர்மா கல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். கண்களிலும், புருவத்திலும் ஆண்கள், பெண்கள் இருவருமே இதை பயன்படுத்துகிறார்கள். அழகுக்காக மட்டுமில்லாமல், இந்த அஞ்சனக்கல்லை பயன்படுத்துவது கண்களுக்கு குளிர்ச்சியை கொடுப்பதாகும். அதுமட்டுமின்றி, வசீகரத்தை ஏற்படுத்தக்கூடியது. இமைகளும், புருவங்களும் நீளமாக வளர்வது மட்டுமில்லாமல், கருமையாகவும் இருக்கும்.

குழந்தைகளுக்கு திருஷ்டி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த அஞ்சன மையைத்தான் குழந்தைகளுக்கு கன்னத்தில், நெற்றியில் இட்டு வந்துள்ளனர். அஞ்சனக்கல்லை பூஜையறையில் வைக்கும்போது எந்த தீய சக்திகளும் வீட்டிற்குள் நுழையாது என்று சொல்லப்படுகிறது. அஞ்சனக்கல்லை இழைத்து அத்துடன் குங்குமப்பூ சிறிது சேர்த்து நெற்றியில் திலகம் இட்டுக்கொண்டு வெளியே செல்லும்போது, எந்த காரியத்திற்காக செல்கிறோமோ அது நிச்சயம் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஏழு ஜன்ம பாவங்களைப் போக்கும் வைகுண்ட ஏகாதசி விரதம்!
Benefits of Anjana kal

வீட்டில் ஒரு பவுலில் அஞ்சனக்கல்லை போட்டுவிட்டு அதில் காசுகள் போட்டு வைத்தால் வீட்டில் பணம் பெருகும். பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி இந்த அஞ்சனக்கல்லிற்கு உள்ளது. தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் தங்கள் அறையில் அஞ்சனக்கல்லை வைத்தால் நன்றாகத் தூக்கம் வரும். இந்த அஞ்சனக்கல் நாட்டு மருந்து கடைகளில் பவுடராகவும், கல்லாகவும் கிடைக்கிறது.

வீட்டில் உள்ள வாஸ்து பிரச்னை, பணப் பிரச்னை, தொழில் பிரச்னை ஆகியவற்றை இது போக்கக்கூடியது. இதை வீட்டில் ஒரு கண்ணாடி பவுலில் கருப்பு உப்பை கொட்டி நிரப்பி அதன் மீது இந்த அஞ்சனக்கல்லை வைத்து படுக்கையறை, பூஜையறை, குழந்தைகள் படிக்கக்கூடிய இடம் ஆகியவற்றில் வைக்கலாம். இதனால் வீட்டில் பீடைகள் ஒழியும், சண்டை சச்சரவு வராது, படிப்பு நன்றாக வரும். தியானம் செய்பவர்கள் இந்த அஞ்சனக்கல்லை கைகளுள் வைத்துக்கொண்டு தியானம் செய்யும்போது அதீத சக்தி கிடைக்கும்.

நான்சி மலர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com