மரகத கல்லின் மகிமை!

Emerald stone
Emerald stone
Published on

நவக்கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் பகவானின் நிறம் பச்சை. நவரத்ன கற்களில் மரகதம் சிறப்பு வாய்ந்தது என்று ரிஷிகள் கூறுகிறார்கள். இந்த மரகதக் கல்லினால் செய்யப்பட்ட சில ஆலயங்களை வழிபாடு செய்தால் மனதில் நினைத்த காரியம் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட இயந்திரங்களுக்கு தான் ஆகர்ஷண சக்தி அதிகம் உள்ளது. அதன்படி மரகத கல்லுக்கு அதீத சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. மரகத லிங்கத்தை கண்களால் பார்த்து வணங்கினால், ஆரோக்கியம் தொழில் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவைகள் நிறைவேறும் என்பார்கள்.

மரகத லிங்கங்கள் அமைந்துள்ள கோவில்கள்

முசுக்குந்த சக்ரவர்த்தி கடும் தவம் செய்து இந்திரனிடம் இருந்து ஏழு விலை மதிப்பில்லாத மரகத லிங்கங்களைப் பெற்றார். வேதாரண்யம், திருக்குவளை, திருக்காரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டணம், திருவாய்மூர் ஆகிய இடங்களில் சிவ ஆலயங்கள் அமைக்கப்பட்டன.

மரகத லிங்கம் மற்றும் மீனாட்சி அம்மன்
மரகத லிங்கம் மற்றும் மீனாட்சி அம்மன்

ராமநாதபுரத்தில் உள்ள உத்தரகோசமங்கையில் இருக்கும் சிவன் கோவிலில் ஆறு அடி உயரமுள்ள நடராஜர் மரகத சிலை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தச் சிலை வருடம் முழுவதும் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மரகதம் மென்மையான கல்லாகும். இதற்கு அதிக ஒளியைக் தாங்கும் சக்தி கிடையாது என்பதால் சந்தனக் காப்பு சாத்தப்பட்டிருக்கும்.

மேலும் மதுரை மீனாட்சி அம்மனின் சிலையும் மரகத கற்களால் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இக்கோவில் அதிக அதிர்வலைகளை பெற்றிருக்கிறது.

மரகதலிங்கத்திற்கு செய்யப்படும் அபிஷேகப் பாலை அருந்துவதால் மருத்துவ பலன்களும் உள்ளதாக நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சென்னையில் புறநானூறு வீதி! அப்படீன்னா என்னங்க?
Emerald stone

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com