வாஸ்து தோஷங்களை விரட்டி, ஐஸ்வர்யத்தை அள்ளித்தரும் காமதேனு சிலை ரகசியங்கள்!

Kamadhenu statue
Kamadhenu statue
Published on

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து தோன்றிய ஐந்து புனித பசுக்களில் காமதேனுவும் ஒன்று. கேட்டதை எல்லாம் கொடுக்கும் அற்புத குணம் கொண்டது இந்த தெய்வீகப் பசு. இது மகாலட்சுமியின் ஒரு வடிவமாகவும் சனாதன தர்மத்தில் கருதப்படுகிறது. இந்த காரணத்தினால் காமதேனுவின் சிலையை வீட்டில் வைத்து ஆராதிப்பதன் மூலம், நல்ல நேர்மறையான மாற்றங்கள் நிகழும் என்று ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர். மேலும், காமதேனு வாஸ்து சாஸ்திரத்தில், செல்வத்தின் பிறப்பிடமாகவும் செழிப்பின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

வாஸ்து தோஷங்களை விரட்டி, ஐஸ்வர்யத்தை பெற, உடனே காமதேனு சிலையை வாங்குங்கள்...

செழிப்பை தரும் காமதேனு: இந்திய மரபின்படி பொதுவாகவே அனைத்து பசுவும் காமதேனுவின் வடிவமாகக் கருதி போற்றப்படுகிறது. பசுவும் கன்றும் இருக்கும் வீட்டில் பாலுக்குப் பஞ்சம் இருக்காது, பால் நிறைந்து இருப்பது, அந்த வீட்டில் செழிப்பு உள்ளது என்பதன் அடையாளமாக இருக்கிறது. இது போலவே காமதேனுவும் அதன் கன்று நந்தினியுடன் சேர்ந்தே சிலைகளில் இருக்கும். இது தாய்மையின் அன்பையும், அடையாளத்தையும் தியாகத்தையும் போற்றுவதாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
சபரிமலை 18 படிகளில் ஒளிந்திருக்கும் வாழ்க்கை ரகசிய தத்துவங்கள்!
Kamadhenu statue

ஆன்மிகப் பெருமை: காமதேனுவின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு தேவர்கள் வாசம் செய்கின்றனர். அது மட்டுமல்லாது, பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும், முப்பெரும் தேவியர்களும் அங்குதான் இருக்கின்றனர். அதனால், காமதேனு இருக்கும் இடத்தில் சகல தெய்வங்களும் வாசம் செய்வதாக நம்பிக்கை இருக்கிறது. காமதேனு சிலையை வழிபடுவதன் மூலம்  முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியை ஒரே நொடியில் பெறலாம்.

சிறந்த உலோகம்:  காமதேனுவின் சிலையை எந்த உலோகத்தில் வாங்குகிறோம் என்பது மிகவும் முக்கியம். சில உலோகங்களில் செய்யப்படும் சிலைகள் அதிர்ஷ்டத்தை தர வல்லது. வெள்ளியில் செய்யப்பட்ட காமதேனுவின் சிலை மன அமைதியை தரும். செவ்வாய் தோஷம் இருந்தால் அதை நிவர்த்தி செய்யும். பித்தளையில் செய்யப்பட்ட காமதேனுவின் சிலை வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கவும், குருவின் அருளைப் பெறவும் உதவும். செம்புவில் செய்யப்பட்ட காமதேனு சிலை வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக, பிளாஸ்டிக் மற்றும் மண் போன்ற உடையும் பொருட்களில் இந்த சிலையை  வாங்கக் கூடாது.

திசை: வா​ஸ்துவின்படி, காமதேனு சிலையை வீட்டின் ஈசான்ய முலையில் (வடகிழக்கு) வைக்க வேண்டும். இந்த திசையில்தான் நீர் மற்றும் ஆன்மிக ஆற்றல் நிறைந்து இருக்கும். இங்கு சிலையை வைக்கும்போது, அது பிரபஞ்சத்தின் நேர்மறை அலைகளை உள்வாங்கி வீடு முழுவதும் பரப்புகிறது. தெற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் காமதேனுவின் சிலையை வைக்கக் கூடாது. இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

இதையும் படியுங்கள்:
மார்கழியில் மட்டுமே நடக்கும் திருநல்லூர் கணநாதர் பூஜையின் ரகசியம்!
Kamadhenu statue

வைக்க வேண்டிய இடங்கள்: தொழில் மற்றும் ​வியாபாரம் செய்பவர்கள் மற்றும் அலுவலகதில் பணி செய்பவர்கள் தங்கள் மேசையின் மீது வடகிழக்கு பகுதியில் சிறிய காமதேனு சிலையை வைக்கலாம். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்காதவர்கள் காமதேனுவை வழிபடுவதன் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெறலாம். இது முடிவெடுக்கும் திறனை அதிகரிப்பதோடு, பணப்புழக்கத்தையும் சீராக்கும்.

பராமரிப்பு: இந்த சிலையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். அதன் மேல் தூசு மற்றும் அழுக்கு சேர விடாமல் கவனமாக வைத்திருங்கள். வெள்ளிக்கிழமைகளில் சிலைக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மல்லிகைப் பூக்கள் தூவி, ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி தூபம் காட்டுவது லட்சுமி கடாட்சத்தை நிரந்தரமாக்கும். காமதேனு எப்போதும் அள்ள அள்ளக் குறையாத செல்வத்தைக் கொடுக்கும் அதிர்ஷ்ட தேவதை ஆகும்.

வாஸ்து தோஷங்களை விரட்டி, ஐஸ்வர்யத்தை பெற, உடனே காமதேனு சிலையை வாங்குங்கள்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com