சிவனுக்குகந்த ஆனி மாத சிறப்புகள்!

Aani maadham
Aani maadham
Published on

மாதங்கள்12 சித்திரைமாதம் தொடங்கி பங்குனிமாதம் வரை! அதேபோல ராசிகள் 12, மேஷம்ராசி தொடங்கி மீனம் ராசி வரை. இதில் ஆனி மாதம் என்பது மிதுன மாதமாகும். ஆனி மாதத்தில் கூனியும் நிமிா்ந்து நிற்பாளாமே! இது வழக்கமான வாக்கியம் , ஆனி மாதத்தில் பகல் பொழுது அதிகமாகவும், இரவுப்பொழுது குறைவாகவும் இருக்கும்.

கோடைக்கு விடை கொடுக்கும் கடைசிமாதமும் ஆனி மாதமே. வழக்கம்போலவே அனைத்து ஆலயங்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறுவது நடைமுறை. இதில் தனிப்பெருமை வாய்ந்தது சிதம்பரம் நடராஜா் கோவில் ஆனித்திருமஞ்சன விழாவாகும்!

ஒவ்வொரு மாதம் பிறக்கும் போதும் மாத தர்ப்பணம் செய்யவேண்டியது நடைமுறை! ஒவ்வொரு மாதமும் வரும் அஷ்டமி திதிக்கு தனித்தனி சிறப்பு உண்டு. 18.6.2025ல் நிகழ்ந்த அஷ்டமியானது பகவதாஷ்டமியாக அனுசரிக்கப்பட்டது. அதேபோல கூா்ம ஜெயந்தியும் பிரதோஷமும் வருகிறது. 23.6.2025ல் சோமவாரதினமான திங்கட்கிழமை வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது.

இதையும் படியுங்கள்:
புளூட்டோவுல ஒரு புது கண்டுபிடிப்பு: மூடுபனி மாதிரி ஒரு வளிமண்டலம்!
Aani maadham

ஜூன் 25ல் அமாவாசையும் , 26ல் (ஆனி மாதத்தில்) வாராஹி நவராத்திாியும் வருகிறது. இவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. புரட்டாசியில் வரும் ஒன்பது நாள் நவராத்திாி போலவே இந்த விழாவும் அற்புதமான நிகழ்வாகும்.

அதேபோல ஆனிமாததில் வரும் சஷ்டியானது "குமாரசஷ்டியாக" அனுசரிக்கப்படுகிறது. மேற்படி சஷ்டி தினத்தில் குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர்கள் முருகனை வேண்டி விரதம் இருப்பது நல்ல பலனைத்தருமாம். அந்த குமார சஷ்டியானது 27.6.2025ல் வருகிறது.

ஆனி மாதமானது தேவர்களின் பகல்காலமாக கருதப்படுகிறது. இத்தனைக்கும் முத்தாய்ப்பாய் ஆனிபெளா்ணமி 10.7.2025ல் வருகிறது. இந்த திருநாளே சிவனுக்குாிய ஆனித் திருமஞ்சனமாகும். உத்திராயன புண்ணிய காலத்தின் கடைசிமாதமே ஆனி மாதமாகும்.

இந்த மாதம் சிவனுக்கு ஏற்ற மாதமாக கருதப்படுவதால் சிவபெருமானை வேண்டுவோம்... சிவ பூஜைகள் செய்வோம்... சிவபெருமானின் அருளைப்பெறுவோம்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com