இன்ப, துன்பத்துக்குக் காரணமான இரு கிரகங்கள்!

ராகு-கேது
ராகு-கேது

ம்மில் பலர் கஷ்டம் என்று வந்துவிட்டால் பிரசித்தி பெற்ற பெரிய கோயிலைத்தான் தேடி ஓடுவோமே தவிர, அவரவர் ஊரில் தெரு முனையில் இருக்கக்கூடிய தெய்வங்களை மறந்து விடுவோம். தீராத கஷ்டங்கள் தீர, பெரிய பெரிய பரிகாரங்களை செய்வதற்கு முன்பு ஒரு முறை உங்கள் வீட்டு தெரு முனையில் இருக்கும் விநாயகரை உங்கள் வீட்டு தெரு முனையில் இருக்கக்கூடிய அம்மனை வழிபாடு செய்து வேண்டிப் பாருங்கள். இந்த இரண்டு வழிபாடுகள் உங்களுடைய கஷ்டங்களை சீக்கிரம் தீர்த்து வைக்கும். காரணம் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் தெய்வங்கள் தினம் தினம் நீங்கள் படும் கஷ்டத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. வரக்கூடிய கஷ்டத்திலிருந்து உங்களைப் பாதுகாப்பது இந்த தெய்வங்கள்தான்.

விநாயகர்
விநாயகர்

பல லட்ச ரூபாய் செலவு செய்து தீர்க்க முடியாத வியாதிகளை கூட மந்திரத்து போட்ட திருநீறு தீர்த்து வைக்கும். அப்படித்தான் பரிகாரங்களும். முதலில் உங்களுக்கு கஷ்டம் என்று வந்துவிட்டால், உங்கள் தெரு முனையில் இருக்கும் விநாயகர் கோயிலுக்குச் சென்று ஒரு ரூபாயை காணிக்கையாக செலுத்தி விட்டு, விநாயகரை வலம் வந்து தோப்புக்கரணம் போட்டு ஒரு சிதறு தேங்காய் உடைத்து அருகம்புல் மாலை சாத்தி வேண்டிக்கொள்ளுங்கள்.

அம்பாள்
அம்பாள்

உங்கள் வீட்டின் அருகில் அம்மன் கோயில் இருந்தால் அந்த அம்மன் கோயிலுக்குச் சென்று மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு, தீபம் ஏற்றி, பழக்கம் இருந்தால் மாவிளக்கு போட்டு, அம்மனுக்கு வாசனை நிறைந்த பூக்களை வாங்கிக் கொடுத்து, உங்களால் முடிந்தால் நிவேதனமாக சர்க்கரை பொங்கல் படைத்து அம்மனின் பாதங்களை பற்றிக் கொண்டாலே போதும், கஷ்டங்கள் தொலைவே சென்று விடும்.

நமது வாழ்க்கையில் வரும் நல்லது கெட்டதுக்குக் காரணமாக இருக்கக்கூடிய கிரகங்கள் என்றால் அது ராகு மற்றும் கேது பகவான். ராகு பகவானுக்கு உண்டான அதிதேவதை என்றால் அது அம்பாள். அதாவது துர்கை அம்மன். கேது பகவானுக்கு அதிதேவதை என்றால் அது விநாயகர். இதனால்தான் இந்த இரண்டு தெய்வங்களையும் ஒவ்வொரு தெருக்களின் முனையிலும் வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். அம்மன் கோயில், பிள்ளையார் கோயில் இல்லாத ஊரே இல்லை என்று கூறலாம்.

அம்மன் கோயில்
அம்மன் கோயில்

அந்தக் காலத்திலேயே நமது முன்னோர்கள் இதற்காகத்தான் இந்த இரண்டு தெய்வங்களையும் நம் வீட்டின் அருகிலேயே வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று இப்படி ஒரு ஏற்பாட்டை நமக்காக செய்து வைத்துள்ளார்கள். ஆனால், இதையெல்லாம் மறந்துவிட்டு கஷ்டம் என்று வந்ததும் அருகில் இருக்கும் இந்த தெய்வங்களிடம் சொல்லாமல் இருப்பது சரியா என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். துன்பம் என்று வந்தால் தொலைவில் இருக்கும் பரிகாரத் தலங்களுக்கு செல்வதற்கு முன்பு, நம்பிக்கை இருந்தால் மேற்சொன்ன இந்த சிறிய விஷயங்களைப் பின்பற்றிப் பார்க்கலாமே. நிச்சயம் உங்கள் கஷ்டங்கள் காணாமல் போகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com