இறை பக்திக்குச் சொல்லப்படும் இருவித உவமைகள்!

மார்க்கட நியாயம்
மார்க்கட நியாயம்
Published on

ருவர் இறைவன் மீது தாம் கொண்ட பக்தியை வெளிப்படுத்த இரண்டு மார்கங்கள் உண்டு. ஒன்று மார்க்கடம் (குரங்கு குட்டி) என்பது. மற்றொன்று மார்ச்சாலம் (பூனைக்குட்டி) என்பது. இந்த இரண்டு வித உவமைகளை மார்க்கட நியாயம் மற்றும் மார்ச்சால நியாயம் என்பர்.

முதலில் மார்க்கட நியாயம் என்றால் என்னவென்று பார்ப்போம். மார்க்கடம் என்பது குரங்கு குட்டியை குறிப்பதாகும். ஒரு குரங்குக் குட்டி தனது தாயின் உடம்பை உறுதியாகப் பற்றிக்கொள்ளும். அதுபோல, நாமும் நமது மனத்தை இறைவன்பால் செலுத்தி, அவனது திருப்பாதத்தை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். தாய் குரங்கு எத்தனை மரத்துக்கு மரம் தாண்டினாலும், ஓடினாலும் தாயின் உடம்பை குட்டிக் குரங்கு கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும். தனது கைகளுக்கு எத்தனை சிரமம் நேர்ந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் குரங்குக் குட்டி தனது தாயின் உடம்பை கெட்டியாகப் பற்றிக் கொண்டிருக்கும்.

குரங்கு குட்டியின் பிடி எப்படி நழுவுவது இல்லையோ அதுபோல, எவ்வித இடையூறுகள் வந்தாலும் அதை லட்சியம் செய்யாமல் தமது மனத்தை இறைவன்பால் மட்டுமே ஐக்கியப்படுத்தி இருக்க வேண்டும். இதையே மார்க்கட நியாயம் என்பர். இதுவே பக்தியின் முதல் நிலை.

அடுத்து இரண்டாவதாக, மார்ச்சால நியாயம். மார்ச்சால நியாயம் என்பது பூனைக்குட்டி நியாயம் எனப்படும். இது இறைவனிடம் கொண்ட பக்தியின் இரண்டாவது நிலை. மார்க்கட நியாயப்படி நாம் நமது மனதை இறைவனிடம் செலுத்தினால் இறைவன், ஒரு தாய் குரங்கு தனது குட்டியைக் காப்பதைப் போல  அருள்புரிவார். அதையடுத்து நாம் பூனைக்குட்டி நியாயம் எனும் நிலையை அடையலாம்.

மார்ச்சால நியாயம்
மார்ச்சால நியாயம்

பூனைக்குட்டி தான் இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டு, தாய் பூனையை நினைத்துக்கொண்டே இருக்கும். பூனை குட்டிகளுக்கு துன்பம் வராமல் அதனை தாய் பூனை பல இடங்களுக்கும் தானே கவ்வி எடுத்துச் சென்று பத்திரப்படுத்திக் காக்கும். அதேபோல், உணவு முதலியவற்றையும் அவற்றுக்குக் கொண்டு வந்து கொடுத்து  காப்பாற்றும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் பாங்க் பேலன்ஸ் கணிசமாக உயர சில ஆலோசனைகள்!
மார்க்கட நியாயம்

இது போல பக்தன் எப்போதும் இறைவனையே தியானித்து தான் இருக்கும் இடத்தில் இருந்தாலே போதும், இறைவன் அவனுக்கு எப்போதும் அருள்  செய்து, துன்பம் ஏதும் வராதபடி வேண்டியன அனைத்தையும் அருளி அவனைக் காப்பாற்றுவார் என்பதே மார்ச்சால நியாயம் எனப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com