திருப்பதி கோயிலில் நாளை தரிசனம் ரத்து: ஏன் தெரியுமா?

திருப்பதி கோயில்
திருப்பதி கோயில்

ப்பசி பௌர்ணமி தினமான நாளை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆலயங்கள் பலவற்றிலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த மாதம் புரட்டாசி உத்ஸவங்களையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து நவராத்திரி பிரம்மோத்ஸவங்களைக் காணவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கிரகண நாட்களில் பெரும்பாலான கோயில்கள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டு சந்திர கிரகணம் ஐப்பசி பௌர்ணமி தினமான நாளை வருவதால், திருப்பதி கோயிலில் பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் நிகழ்வாகும். சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும்பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரஹஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரஹஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கடைசி சந்திர கிரகணம் நாளை 28ம் தேதி நள்ளிரவில் நிகழ உள்ளது.

சந்திர கிரகணம் எப்போது?

சந்திர கிரகணம் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் நிகழ உள்ளது. மேஷ ராசியில் குரு, ராகு, சந்திரன் இணைந்து இருக்கும் நேரத்தில் சந்திர கிரகணம் நிகழப்போகிறது. சந்திரன் மட்டுமல்ல, குரு பகவானும் சில மணி நேரங்கள் கிரகணத்தின் பிடியில் சிக்குகிறார்.

சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8 மணி நேரத்திற்கு மேல் கதவு மூடப்பட்டிருக்கும். அதாவது, 28ம் தேதி இரவு 7.05 மணிக்கு ஏழுமலையான் கோயிலின் கதவுகள் மூடப்படும். அதன்பின் 29ம் தேதி அன்று மீண்டும் திறக்கப்படும். மேலும், சந்திர கிரகணமானது, 29ம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் 2:22 மணி வரை பகுதி சந்திர கிரகணம் நிறைவடைகிறது. இதனால் கோயில்களின் கதவுகள் 8 மணி நேரம் மூடப்பட்டிருக்கும். அதனால் 28ம் தேதி நடைபெறும் சகஸ்ர தீபலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்கள் இலவச தரிசனம் போன்றவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com