வாஸ்துபடி சமையலறை இப்படித்தான் இருக்க வேண்டும்!

வாஸ்துபடி சமையலறை இப்படித்தான் இருக்க வேண்டும்!

ந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஏனென்றால், வீட்டில் வாஸ்து குறைபாடு ஏற்பட்டால், வாழ்க்கையில் எக்கச்சக்கமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது. அதனால்தான், வீடு கட்டுவது முதல் அலங்காரம் செய்வது வரை வாஸ்துவுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு அறையும் எங்கே இருக்க வேண்டும் என வாஸ்து கூறுகிறது. அதிலும் குறிப்பாக, சமையலறை எந்தத் திசையில், எப்படி அமைந்திருக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஒரு வீட்டில் குடியேறும்போது பெண்கள் முக்கியமாகப் பார்ப்பது சமையலறைதான். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கிச்சனில் வாஸ்துபடி எந்த பொருள் எங்கே இருக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

ஒரு வீட்டின் சமையலறை அந்த வீட்டின் தென்கிழக்கு திசையில் இருப்பது சிறப்பு. வடமேற்கு திசையில் இருந்தாலும் நல்லது. வாஸ்துபடி தீ, எரிவாயு அடுப்புகள், சிலிண்டர்கள், மைக்ரோவேவ் ஓவன் மற்றும் பிற உபகரணங்கள் சமையலறையின் தென்கிழக்கு பகுதியில் வைக்கப்பட வேண்டும்.

அதேபோல, வாஷ்பேசின்கள் மற்றும் சமையல் அடுப்பை ஒரே மேடையில் இருக்கும்படி வைக்கக்கூடாது. அல்லது ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்படி வைக்க வேண்டாம். மேலும் வாஷ்பேசின்கள், வாஷிங் மெஷின், நீர் குழாய்கள் மற்றும் சமையலறை வடிகால்களை வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைத்திருங்கள். வாழ்க்கையில் உள்ள தடைகளை சமாளிக்க குளிர்சாதன பெட்டியை தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும்.

வீட்டின் வடமேற்கு திசையில் சமையலறை அமைக்கும்போது கிழக்கு நோக்கி நின்றுதான் சமைக்க வேண்டும். ‘வாஷ் பேசின்’ அல்லது ‘சிங்க்’ ஆகியவற்றை வடகிழக்கு திசையில் வருவதுபோல அமைத்துக்கொள்ள வேண்டும். ‘ஸ்டோரேஜ் ஷெல்ப்’ அல்லது அலமாரிகளை தெற்கு அல்லது மேற்கு சுவரை ஒட்டியவாறு அமைத்துக்கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com