லக்ஷ்மி கடாட்சம் தரும் முத்தான மூன்று பரிகாரங்கள்!

லக்ஷ்மி கடாட்சம் தரும் முத்தான மூன்று பரிகாரங்கள்!
Published on

‘கஷ்டப்பட்டுதான் உழைக்கிறேன், வருமானம் கூடவும் இல்லை; உழைப்புக்கு ஏற்ற பண வரவும் இல்லை’ என்று பலரும் புலம்புவதை அடிக்கடி கேட்க முடிகிறது. அவர்களுக்கு ஒரு சிறிய பரிகாரம்:

உங்கள் வீட்டில் நிற்பது போல் மகாலக்ஷ்மி படம் இருந்தால் (இல்லையென்றால் வாங்கிக்கொள்வது நல்லது) அந்தப் படத்தைத் துடைத்து, அதற்கு பொட்டு வைத்து வாசமுள்ள பூவைச் சாத்துங்கள். அந்தப் படத்துக்கு முன்பு ஒரு நெய் தீபத்தையும் ஒரு ஊதுபத்தியையும் ஏற்றிவைத்து, ‘ஓம் ஹ்ரீம் பத்மே ஸ்வாஹா’ என்று ஆயிரம் முறை ஜபம் செய்யுங்கள். இந்த மந்திரத்தைச் சொல்லி வாசமுள்ள மலர்களாலும் குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யுங்கள்.

இப்படி அர்ச்சனை செய்த குங்குமத்தை நெற்றியில் வைத்துக்கொண்டு, எந்த ஒரு காரியத்தின் பொருட்டும் வெளியில் இருந்து கிளம்புங்கள். அந்த காரியம் வெற்றியில் முடிவதோடு, உங்களுக்கு அனுகூலமாகவும் இருக்கும். அந்த அர்ச்சனை குங்குமம் ரட்சையாகவும் உங்களைக் காக்கும். வரவே இல்லை என்று வருத்தப்படுபவர்களுக்கு பண வரவு தேடி வர ஆரம்பிக்கும்.

‘பண வரவு என்னவோ இருக்கத்தான் செய்கிறது; ஆனால், வீட்டில் லக்ஷ்மி கடாட்சம்தான் இல்லை’ என்று சில பேர் வருத்தப்படுவார்கள். அவர்களுக்காக ஒரு சிறிய பரிகாரம்.

உங்கள் வீட்டில் காமாட்சி விளக்கு இருந்தால் அதை எடுத்துக்கொள்ளுங்கள். சிறிதாய் இல்லாமல் கொஞ்சம் பெரியதாய் இருப்பது நல்லது. அதில், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், சந்தனாதித் தைலம் ஆகியவற்றை சேர்த்து, பஞ்சு திரி போட்டு ஒரு தீபத்தை ஏற்றுங்கள். அந்த தீபம் கிழக்கு திசை நோக்கி இருப்பது விசேஷம். இந்த தீபத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வேளைகளிலும் தொடர்ந்து ஏற்றி வர, வீட்டில் சுப காரியங்கள் மற்றும் மங்கல நிகழ்வுகள் நிச்சயம் இனிதே நடைபெறும்.

ரு வீட்டில் தொடர்ந்து துன்பகரமான செயல்கள் நடைபெறுவது, வறுமை, பிணி என்று கஷ்டப்படுவதற்கு பித்ரு தோஷமும் ஒரு காரணமாக அமைகிறது. பித்ரு தோஷம் விலகவும், பித்ருக்களின் ஆசீர்வாதம் குறைவின்றி கிடைக்கவும் ஒரு எளிய பரிகாரம்.

கருப்பு எள்ளை பொடி செய்து வறுத்துக்கொள்ள வேண்டும். பிறகு பாசிப் பருப்பைப்போட்டு சாதம் வடிக்க வேண்டும். அடுத்து, பொடி செய்து வறுத்த எள்ளை அதனோடு சேர்க்க வேண்டும். இந்த சாதத்தை முன்னோர்களின் படத்துக்கு முன்பு வைத்து படைத்து வழிபட வேண்டும். அதன் பிறகு இந்த சாதத்தை மூன்று பாகமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும்.

அதில் ஒரு பாகத்தை காக்கைக்கு உணவாக வைக்க வேண்டும். இன்னொரு பாகத்தை வீட்டில் உணவுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது பாகத்தை பசு ஒன்றுக்கு தந்துவிட வேண்டும். ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் இப்படியே செய்து வர, பித்ருக்களின் பரிபூரண ஆசி கிடைக்கும். இதனால் மேற்சொன்ன துன்பங்கள் விலகி, வீட்டில் சந்தோஷம் நிலைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com