முதல் முறையா கொலு வைக்கப்போறீங்களா? இதோ சில டிப்ஸ்!

முதல் முறையா  கொலு வைக்கப்போறீங்களா? இதோ சில டிப்ஸ்!

கொலு  வைப்பதற்கு முன் சுவர்கள் தரைகளை சுத்தம் செய்து, துடைத்து அழகான பெரிய சுவாமி படங்களை மாட்டி வைக்கலாம்.

கொலுப்படிகள் அமைத்து துணி விரித்ததும், ஒவ்வொரு படியின் ஓரங்களையும் படியோடு சேர்த்து ஒட்டி விட்டால் துணி நகர்ந்து விடாமல், பொம்மைகள் நழுவி விழாமல் இருக்கும்.

பூஜை செய்யும் போது தீபாராதனை, கற்பூர ஆரத்தி போன்றவற்றை படிகளின் அருகில் காட்டுவதை தவிர்த்தால், சூடு, புகை படித் துணிகளின் மேல் விழாமல் காக்கலாம்.

வாசற்படியில் மஞ்சள் தடவி, குங்குமம் இட்டு பூஜை செய்ய வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும். மஞ்சள், மாவிலை இரண்டும் மங்கலகரமானவை மட்டும் அல்ல, கிருமி நாசினியும் கூட.

ரஸ்வதி பூஜையன்று மரப்பலகையில் கோலம் போட்டு, புத்தகங்களை அழகாக அடுக்கி, அவற்றின் மேல் மஞ்சள், குங்குமம் வைத்து, பூ மாலைகள், நெல்லித்தழை, மாங்கொழுந்து, கஜவஸ்திரம் (பஞ்சுமலை) சாற்றிப் பூஜை செய்ய வேண்டும்.

பிளாஸ்டிக் பொம்மைகள், பொருட்களை தவிர்க்கலாம். மண் பொம்மைகள், மரபொம்மைகள், பீங்கான் பொம்மைகளேயே வைக்கலாம்.

குழந்தைகளுக்கு பொம்மைகள், பேனா, பென்சில், பக்தி புத்தகங்கள் வழங்கலாம்.

கொலு முடிந்ததும் பொம்மைகளை பருத்தித் துணி அல்லது செய்தித்தாள்களில் சுற்றி வைக்க வேண்டும். பிளாஸ்டிக் கவர்களில் வைத்தால் காற்றோட்டம் இன்றி பொம்மைகளின் வண்ணம் மங்கிவிடும்.

சுண்டல் தீர்ந்து விட்டால் சுண்டலுக்கு பதிலாக கற்கண்டு, திராட்சை, பேரிச்சம் பழம், முந்திரி, பாதாம் போன்றவற்றை பாக்கெட்டுகளில் போட்டு தரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com