திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 7-ந்தேதி மகா கும்பாபிஷேக விழா

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
Published on

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோவில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாக அமைந்துள்ளது.

திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் இராஜகோபுரம் இருக்கிறது. இங்கு முருகப்பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்து சிவபெருமானை வழிபடுகிறார். இப்படி தனிச்சிறப்பு வாய்ந்த இந்த தலத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமியாக காட்சி அளிக்கிறார். முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

இதையும் படியுங்கள்:
திருச்செந்தூர் கோவிலில் பஞ்ச லிங்கங்களுக்கு பூஜைகள் நடக்காது ஏன்?
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

அதுமட்டுமின்றி திருச்செந்தூர் கடல் அமாவாசை, பவுர்ணமியுடன் நேரடி தொடர்பு கொண்டதாக மாறி விட்டது. அன்றைய தினங்களில் கடல் அலைகளும், தண்ணீரும் பல அடி தூரம் உள்வாங்கி பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இந்த அதிசயத்தை காண்பதற்கும், பவுர்ணமி நாட்களில் கடற்கரையில் தங்கி இருந்து தரிசனம் செய்வதற்கும் தற்போது வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறும். குறிப்பாக வைகாசி மாதம் விசாக திருவிழா, ஆவணியில் ஆவணித்திருவிழா, ஐப்பசியில் கந்தசஷ்டி விழா, தை மாதத்தில் தைப்பூச திருவிழா, மாசியில் மாசித் திருவிழா ஆகியவை பிரசித்தி பெற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும் திகழ்கிறது. இதனால் இங்கு குருப்பெயர்ச்சி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் மூலவர் மற்றும் தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், அதிலும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்கின்றனர்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த ரூ.300 கோடி மதிப்பிலான பெருந்திட்ட வளாக பணி மற்றும் கும்பாபிஷேக திருப்பணிகள் பெரும்பாலும் நிறைவு பெற்றுள்ளன. ராஜகோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு கோபுரங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன. கோவிலில் சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் விமான கலசங்களில் தங்கத்தகடு பதிக்கும் பணி முடிவடைந்துவிட்டது.

இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடந்த பின்னர் காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுர கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதேநேரத்தில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்:
'திருச்செந்தூர் தலப்புராணம்' உருவானக் கதைப் பற்றித் தெரியுமா?
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

மேலும் 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com