மகத்துவம் வாய்ந்த பரந்தாமனின் பன்னிரு திருநாமங்கள்!

மகத்துவம் வாய்ந்த பரந்தாமனின் பன்னிரு திருநாமங்கள்!
Published on

ண்ணற்ற திருநாமங்களைக் கொண்ட பரந்தாமனின் ஆயிரம் திருநாமங்களை தொகுத்து பீஷ்மர், யுதிஷ்டிரனிடம் கூறியதுதான் விஷ்ணு சகஸ்ர நாமம். அந்த ஆயிரம் திருநாமங்களை பன்னிரண்டு திருநாமங்களாக சுருக்கி பரந்தாமனி்ன் பெருமைகளைக் கூறுவதுண்டு.

அதற்கு, ‘த்வாதச’ எனப் பெயர். வைணவர்கள் மிக முக்கியமாகக் கருதும் இந்தப் பன்னிரண்டு திருநாமங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. அத்திரு நாமங்களும் அவற்றின் விளக்கங்களும்:

1. கேசவ: துன்பத்தைத் தீர்ப்பவன்.

2. நாராயண: உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்.

3. மாதவ - திருமகள் மணாளனாகத் திகழ்பவன்.

4. கோவிந்த: பூமியை பிரளயத்திலிருந்து காத்தவன் அல்லது பசுக்களை மேய்த்தவன்.

5. விஷ்ணு: அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்.

6. மதுஸுதனா: புலன்களாகிய இந்திரியங்களை ஈர்ப்பவன் அல்லது மது என்னும் அரக்கனை வென்றவன்.

7. த்ரிவிக்ரம: மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்.

8. வாமன: குள்ளமான உருவம் உடையவன்.

9. ஸ்ரீதர: ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்.

10. ஹ்ருஷிகேச: தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்.

11. பத்மநாப: தனது நாபியிலே தாமரையை உடையவன்.

12. தாமோதர: உரலில் கயிற்றால் கட்டப்பட்ட அடையாளம் கொண்ட வயிறு உடையவன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com