உயிர் பெற்று அசைந்த திருவண்ணாமலை பெரிய நந்தி!

Uyir Petru Asaintha Thiruvannamalai periya Nanthi
Uyir Petru Asaintha Thiruvannamalai periya Nanthihttps://m.facebook.com

ந்து மத கோயில்களில் இருக்கும் ஒவ்வொரு சிலைக்கு பின்பும் ஒரு வரலாறு உண்டு. அதிலும் சிவாலயங்கள், அதனுள் இருக்கும் நந்தி, அந்த வரலாறுகள் நமது கலையையும், கலாசாரத்தையும், தெய்வ நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுபவையாக விளங்குகின்றன. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் நந்தியின் அற்புதம் பற்றி நீங்கள் அறிந்திடாத சில விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.

முகலாயர் காலத்தில் திருவண்ணாமலைக்கு வந்த முகலாய அரசன் ஒருவன் இந்தக் கோயிலை சிதைக்க எண்ணினான். அப்பொழுது கோயில் அருகில் ஐந்து சிவ பக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்று வழிபட்டனர். அதைப் பார்த்த அரசன், “நீங்கள் மாட்டினை தலையில் வைத்து வணங்குவது ஏன்?” எனக் கேட்டான்? அதற்கு அவர்கள், “இது இறைவன் சிவபெருமானின் வாகனம். அவரை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும்பாக்கியம்” என்றனர்.

அதற்கு அரசன், “உங்கள் அண்ணாமலையார் உண்மையிலேயே சக்தி உடையவராக இருந்தால் நான் இந்த மாட்டை இரண்டாக வெட்டுகிறேன். வந்து சேர்த்து வைத்து உயிர் கொடுக்கச் சொல்” என்று கூறி வெட்டி விட்டான். ஐவரும்  அண்ணாமலையாரிடம் முறையிட, அண்ணாமலையார் அசரீரியாய் வடக்கே என் ஆத்ம பக்தன் ஒருவன் நமசிவாய என ஜபித்துக்கொண்டிருக்கிறான். அவனைத் தேடி இங்கு அழைத்து வாருங்கள்” என்றார்.

உடனே அங்கு சென்ற ஐவரும் அந்த இடத்தில் 15 வயது பாலகனைக் கண்டனர். ஐவரும் இச்சிறு பாலகனா பக்தன் என நினைத்தபோது, அருகே காட்டிலிருந்து புலி ஒன்று ஐவரையும் தாக்க முற்பட்டது. அச்சிறு பாலகன்தான் புலியை நமசிவாய மந்திரம் கூறி வென்று அவர்களைக் காப்பாற்றினான்.

ஐவரும் நடந்ததை பாலகனிடம் கூறி அச்சிறு பாலகனை அழைத்துச் சென்றனர். அண்ணாமலையார் கோயில் வந்தடைந்த அவர்கள் அரசனைக் கண்டு, ‘தான் அந்த மாட்டின் இரண்டு துண்டுகளையும் இணைத்து உயிர் கொடுப்பதாகக்’ கூறினான்.

அண்ணாமலையார் முலஸ்தானம் சென்று நமசிவாய மந்திரம் கூறி, அந்த மாட்டினை இணைத்து உயிர்பெறச் செய்தான் அந்த பாலகன். அதை நம்ப மறுத்த முகலாய அரசன், ‘நீ ஏதோ சித்து வேலை செய்கிறாய்’ எனக் கூறி நம்ப மறுத்தான்.

“சரி, மற்றொரு வாய்ப்பு. இதில் நீ வென்றால் இந்த கோயிலை நான் ஒன்றும் செய்ய மாட்டேன். நான் வென்றால் இடித்து விடுவேன்” எனக் கூறினான். அச்சிவபாலகன் அண்ணாமலையார் மேல் வைத்த நம்பிக்கையில் போட்டிக்கு சம்மதித்தான்.

அரசன் தற்போது ஒரு தட்டு நிறைய மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள். அவருக்கு சக்தி இருந்தால் அது பூவாக மாற்றட்டும்” எனக் கூறினான். அவன் ஆணைப்படி வீரர்கள் மாமிசத்தை ஈசனுக்கு படைக்க முற்பட்டனர். அண்ணாமலையார் அருகே மாமிசத்தை வைத்ததும் மாமிசம் பூக்களாக மாறியது.

அதில் பல ரக பூக்களும் தட்டு முழுவதும் நிரம்பி வழிந்தது. இதனைக் கண்ட ஐவரும் பாலகனும் ஓம் நமசிவாய அண்ணாமலைக்கு அரோகரா எனப் போற்றி பேரானந்தம் அடைந்தனர்.

திருவண்ணாமலை பெரிய நந்தி
திருவண்ணாமலை பெரிய நந்தி

இதனையும் நம்பாத அந்த அரசன் கோயில் பெரிய நந்தியை பார்த்து, “இந்த உயிரில்லாத நந்திக்கு உயிர் கொடுத்து காலை மாற்றி மடித்து வைத்து உட்கார்ந்து விட்டால் உங்கள் அண்ணாமலையாரை வணங்கி இக்கோயிலை சிதைக்கும் முயற்சியையும் கொள்ளை அடித்த நகைகளையும் அண்ணாமலையாரிடமே ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்றான்.

உடனே நமசிவாய மந்திரம் கூறிய அப்பாலகனும் ஐவரும் அண்ணாமலையாரிடம் நம் பெரிய நந்திக்கு உயிரூட்டுமாறு வேண்டினர். அண்ணாமலையார் உடனே பெரிய நந்திக்கு உயிர் கொடுத்து கால் மாற்றி மடக்கி வைக்க உத்தரவிட்டார். அன்று முதல் அண்ணாமலையார் கோயிலின் பெரிய நந்தி மட்டும் வலது காலை மடித்து, இடது காலை முன் வைத்து அண்ணாமலையாரை வணங்கி வருகிறார்.

இதையும் படியுங்கள்:
மதுரை மீனாட்சியம்மன் பள்ளியறை பூஜையை  தரிசிக்க என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?
Uyir Petru Asaintha Thiruvannamalai periya Nanthi

அரசனும் அண்ணாமலையாரை வணங்கி அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு சென்று விட்டான். சிவன் கோயில்களில் அனைத்து நந்திகளும் இடக்காலை மடக்கி, வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும். ஆனால், அண்ணாமலையார் கோயிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி, இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருப்பது சிறப்பு.

அன்று அங்கு வந்த பாலகனே வீரேகிய முனிவர் என அழைக்கப்படுகிறார். அவர் வாழ்ந்த ஊர் சீநந்தல் எனும் கிராமம். இக்கிராமம் வடக்கே இருப்பதாலேயே நந்தியும் வடக்கு நோக்கி லேசாக திரும்பி காணப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com