வீட்டில் செல்வ வளம் கொழிக்க ஆடி வெள்ளி வழிபாடு!

அம்மன் வழிபாடு
அம்மன் வழிபாடுhttps://tamil.webdunia.com
Published on

டி மாதம் என்பது அம்மனுக்கு மிக உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோயில்களிலும் தீமிதி திருவிழா, தேர்த்திருவிழா என கோலாகலமாக இருக்கும். குறிப்பாக, இந்த மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆடி வெள்ளிக்கிழமைகளில் பிற கோயில்களுக்குச் சென்று வழிபடுவதற்கு முன்பாக நம்முடைய குலதெய்வத்தை வணங்குவது அவசியம். ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை ஆதிபராசக்தியாக அலங்கரித்து வழிபாடு செய்தால் வீட்டில் வளங்கள் அனைத்தும் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அனைத்து வெள்ளிக்கிழமையும் எல்லா தெய்வங்களுக்கும் உகந்ததுதான் என்றாலும் ஆடி வெள்ளி அம்மனின் அருள் பெற மிகவும் ஏற்றதாகும். சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கம் என்பது ஐதீகம். இந்த மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி கிழமைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து உணவு அளித்து அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல் குங்குமச்சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றை கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் பூரணமாகக் கிடைக்கும் என்பதை ஐதீகம்.

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியன்றும் புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று நாகருக்கு பால் வார்த்து குலம் தழைக்க வேண்டுதல் செய்து கொள்ளலாம். முதல் வெள்ளியன்று இனிப்பு தேங்காய் கொழுக்கட்டை, உப்பு காரம் பருப்பு கொழுக்கட்டை, எள்ளு கொழுக்கட்டை இவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். ஆடி வெள்ளி அன்று விரதம் இருந்து அம்மனை தரிசித்து வந்தால் திருமணம் ஆகாதவர்களக்கு விரைவில் திருமணம் ஆகும் என்பதும், சுமங்கலிப் பெண்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. ஆடி வெள்ளியில் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து படையில் போடுவது சிறப்பு. ஆடி மாதத்தில் வருகின்ற ஐந்து வெள்ளிக்கிழமைகளில் நாளை முதல் வெள்ளிக்கிழமை ஆகும்.

ஆடி மாதம் குத்துவிளக்கை மகாலட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும். அம்மனை வழிபடும்போது மறக்காமல் லலிதா சஹஸ்ரநாமம் சொல்ல வேண்டும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்குத் தடை யின்றி நடைபெறும் ஆடி மாதம் அம்மனுக்கு அணிவிக்கப்படும் வளையங்களை பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
மாத்திரைகளை எப்படி சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் தெரியுமா?
அம்மன் வழிபாடு

ஆடி வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி தூய ஆடை அணிந்து சாணத்தைப் பிள்ளையாக பிடித்து செவ்வரளி செம்பருத்தி மலர் கொண்டு சூரிய உதயத்துக்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழை இலை மீது நெல்லை பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட வீட்டில் செல்வம் கொழிக்கும்.

ஆடி வெள்ளிக்கிழமையில் குலதெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் படைப்பது மிகவும் விசேஷம். சர்க்கரை பொங்கல், வெற்றிலை பாக்கு ஆகிய இரண்டு மட்டுமே போதுமானது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்துக்கு முன்பே பூஜையை முடிப்பது சிறப்பு. ஒரு ரூபாயை மஞ்சள் துணியில் காணிக்கையாக முடித்து வைத்து குல தெய்வத்தை வேண்டிக்கொள்ள வேண்டும். உங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் குலதெய்வம் கோயிலுக்கு போகும்போது அதை மறக்காமல் கொண்டு போய் உண்டியலில் சேர்த்து விட வேண்டும். ஆடி வெள்ளிக்கிழமை  குலதெய்வத்தை மறக்காமல் வழிபட்டால் அனைத்து வளங்களும் சேரும்.

நாளை முதல் அடி வெள்ளிக்கிழமை. அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டு சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com