வேண்டுவது வேண்டியபடி கிடைக்கும் ஷடசீதி புண்ணிய கால மகிமை!

சிவசக்தி வழிபாடு
Shiva Shakti Worship

ன்று (15.06.2024) ஷடசீதி புண்ணிய காலம். ஷடாங்கன் என்றால் சிவன் என்று பொருள். சிவபெருமானுக்குரிய மாதங்கள் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்கள் பிறக்கும் நேரமே ஷடசீதி  புண்ணிய காலம் எனப்படுகிறது.

அந்த வகையில், ஆனி மாதம் சிவபெருமானுக்கு விசேஷமான ஷடசீதி புண்ணிய காலமாகும். ஒவ்வொரு வருடமும் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஒன்றாம் தேதி என வருடத்தில் நான்கு ஷடசீதி புண்ணிய காலம் வரும். ஷடசீதி புண்ணிய காலம் பிறக்கும் நாளில் சிவசக்தி வழிபாடு, சித்தர்கள், ஞானிகளின் ஆகியோர் அருள் பெற்று வருவது தனிச் சிறப்பினைத் தரும்.

சிவபெருமானுக்கு மிகப்பிரியமான மேஷம், கடகம், கன்னி, கும்ப ராசிகளில் பிறந்தவர்கள் இந்த நாளில் சிவசக்தியை வழிபடுவது கூடுதல் சிறப்பு. இதனால் ஆற்றலையும் மன மகிழ்ச்சியையும் தரும். இந்த நாளில் சிவன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை, ஆராதனை செய்து வருவது சிறப்பு. இன்றைய தினம் முழுவதும் முடிந்த வரை சிவ சிந்தனையுடன் இருப்பது சிறப்பு.

இந்த நாளில் சிவன் சக்தியிடம் நீங்கள் வைத்த கோரிக்கை அடுத்து வரும் மூன்று ஷடசீதி புண்ணிய காலத்திற்குள் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்தால் பித்ருக்களின் ஆசியும் உதவிகளும் நிச்சயம் கிடைக்கும். இந்நாளில், ‘திரு’ என்று தொடங்கும் ஊர்களில் உள்ள சிவன் கோயில்களை வழிபட்டு வருவது சிறப்பினைத் தரும்.

இதையும் படியுங்கள்:
நீரில் ஊற வைத்த உலர் திராட்சையின் 8 ஆச்சரியப் பலன்கள்!
சிவசக்தி வழிபாடு

சிவபெருமான் கடவுளுக்கு எல்லாம் கடவுள், தேவர்களுக்கெல்லாம் தேவர் மகாதேவர். மகேஸ்வரன் சிவன் எளிமையானவர். சிவனிடம் வரம் வேண்டுவது மட்டுமின்றி, அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். சிவனின் அடி முதல் முடி வரை நமது வாழ்வியல் குறித்தும் பண்பு நலன்கள் குறித்து சூசகமாக பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

சிவன் எளிமையானவராக இருந்தாலும், அவரது உடல் திறன் வலிமையானது திடகாத்திரமாகவும் இருக்கும். இதன் மூலம் எளிமையானவர்களின் வாழ்க்கைதான் வலிமையாக, திடமான நிலைக்குச் செல்லும் என்பதை உணரலாம். ஜடாமுடி, நெற்றிக்கண், திரிசூலம், சாம்பல் பூசிய தோற்றம், நாகம், நீலகண்டம், உடுக்கை, கங்கை, கமண்டலம் என அனைத்துமே மனித வாழ்க்கைக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றன. ‘நான்’ என்னும் அகங்காரத்தை விட்டு விட்டாலும், உங்கள் மனநிலையும் மற்றும் உடல் நிலையும் மேலோங்கும் என்பதை சிவனிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com