ஆண்டுதோறும் இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தான் விநாயகர் சதுர்த்தி, தமிழகம் மட்டும் மின்றி இந்தியா முழுவதும் இந்த பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
சிவனின் முதல் மகனான விநாயகர் மூல முதற் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். எந்த கோயிலுக்குள் சென்றாலும் விநாயகரை வழிபட்ட பின்னரே அனைவரையும் வழிபடும் வழக்கம் உண்டு. அந்த அளவிற்கு விநாயகர் ஒரு சக்தி வாய்ந்த கடவுள் ஆவார். அவரின் பிறந்த நாளே விநாயகர் சதுர்த்தியாக நாம் கொண்டாடுகிறோம். அந்த நாளில் அவரின் சிலையை வைத்து வணங்கினால் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
விநாயகர் சதுர்த்தி எப்போது?
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி தமிழ்நாட்டில் செப்டம்பர் 18 ஆம் தேதியும், வட மாநிலங்களில் செப்டம்பர் 19 ஆம் தேதி செவ்வாய் கிழமையும் கொண்டாடப்படுகிறது.
பூஜைக்கான நேரம்:
இந்து நாட்காட்டியின்படி, விநாயகர் சதுர்தசி 2023 செப்டம்பர் 18, திங்கட்கிழமை மதியம் 12:39 மணிக்குத் தொடங்கி செப்டம்பர் 19 செவ்வாய்கிழமை இரவு 8:43 மணிக்கு முடிவடையும். மேலும், நீங்கள் மத்யாஹன விநாயகர் பூஜை முஹுரத்தைப் பார்த்தால், இது காலை 11:01 மணிக்கு தொடங்கி பிற்பகல் 01:28 வரை நீடிக்கும். இதன் கால அளவு 02 மணிநேரம் 27 நிமிடங்களாக இருக்கும். விநாயகர் சதுர்த்திக்கு ஒரு நாள் முன்னதாக சந்திரனை பார்ப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு ஒவ்வொருவரும் செய்வது அவசியமானது. அனைவரும் அவர்களது வீட்டில் சிறிய மண் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு மூன்று அல்லது 5 நாட்கள் கழித்து அதை நீர் நிலைகள், ஆறு, கடலில் கரைப்பது நல்லது.