கடவுள்கள் பேசிக்கொள்வதை கேக்கணுமா? அப்போ இந்தக் கோயிலுக்குப் போங்க!

Want to hear the gods speak? Then go to this temple!
Want to hear the gods speak? Then go to this temple!https://shajapur.nic.in
Published on

‘கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது’ என்று சொல்வது போல, கடவுளை கல்லாகப் பார்த்தால் அது கல்லாகத் தெரியும். உயிருள்ளதாய் பார்த்தால், கல்லுக்கும் உயிர் வரும். அதுபோலதான் ராஜ ராஜேஸ்வரி திரிபுரசுந்தரி கோயிலில் நடக்கும் அதிசயமும் உள்ளது. பீஹார் மாநிலம், பஸ்தர் என்னும் இடத்திலுள்ள ராஜ ராஜேஸ்வரி திரிபுர சுந்தரி கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் ஆண்டுதோறும் திரண்டு வருகிறது.

துர்கா தேவி அருள்புரியும் இக்கோயில் சுமார் 400 வருடங்கள் பழைமையானதாகும். இதை நிறுவியவர் தந்திரிக் பவானி மிஸ்ரா. துர்கா தேவி கெட்டதை அழித்து நன்மையை நிலைநாட்டக் கூடியவராவார். இந்தியா முழுவதும் நிறைய துர்கை கோயில்கள் இருந்தாலும், கும்பகோணம் அருகிலிருக்கும் பட்டீஸ்வரம் மற்றும் கதிராமங்கலம் துர்கை கோயில்களே மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இக்கோயிலில் துர்கா தேவியின் வெவ்வேறு அவதாரங்கள் கொண்ட சிலைகள் உள்ளன. திரிபுரா, துமாவதி, தாரா, காளி, கமலா, புவனேஸ்வரி போன்ற பல அவதாரத்தில் துர்கா தேவி காட்சி தருகிறார். இங்கு இருக்கும் முக்கியமான கடவுள், ராஜ ராஜேஸ்வரி திரிபுர சுந்தரியாகும். இக்கோயில் தச மஹாவித்யாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் உள்ள பைரவரை அன்னபூரண பைரவர், கால பைரவர், மாதங்கி பைரவர் என்று பல பெயர்களில் வழிபடுகிறார்கள்.

இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை என்னவென்றால், இக்கோயிலில் உள்ள தெய்வ சிலைகள் இரவானால் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளுமாம். அதை நம்மால் கேட்க முடியும் என்றும் கூறுகிறார்கள். அதனால் விஞ்ஞானிகளின் குழு இவர்கள் சொல்வது உண்மையா என்று ஆராய்வதற்காக ஒரு நாள் இரவு முழுவதும் கோயிலில் தங்கி ஆராய்ந்துள்ளனர்.

கோயில் வெளித் தோற்றம்
கோயில் வெளித் தோற்றம்https://www.navrangindia.in

இரவானதும் கோயிலுக்குள் இருந்து பேசும் ஒலிகள் கேட்கிறதாம். ஆனால், மனிதர்கள் யாரும் உள்ளே இல்லையாம். பேசும் சத்தம் எதிரொலி போல கேட்கிறாதாம். கோயிலில் இருந்து பேசும் சத்தம் தெளிவாகக் கேட்கிறதாம். ஆனால், யாராலும் என்னவென்று புரிந்துகொள்ள முடியவில்லையாம்.

இதையும் படியுங்கள்:
‘ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்’ பழமொழியின் பொருள் தெரியுமா உங்களுக்கு?
Want to hear the gods speak? Then go to this temple!

இந்த நிகழ்வு எப்போது நடக்கிறதென்றால், யாரும் மனிதர்களே அந்த இடத்தில் இல்லாத சமயத்திலேயே சிலைகள் பேசிக்கொள்கிறது என்று கூறுகிறார்கள். எனினும், இதற்குப் பின் இருக்கும் மர்மம் புரியாத புதிராகவே இன்றும் உள்ளது. திரிபுர சுந்தரியிடம் வேண்டிக்கொள்வது அனைத்துமே பலிக்கும் என்று இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.

இக்கோயில் தாந்திரீகர்களிடத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தியா முழுவதிலுமிருந்து தாந்திரீகம் செய்பவர்கள் இக்கோயிலுக்கு வருவதுண்டு. எனவே, இக்கோயிலிலுள்ள திரிபுர சுந்தரியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கடவுள் சிலைகள் பேசுகிறது என்று சொன்னால் யாருக்குதான் அதை பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் இருக்காது. அதனால் இந்தியா முழுவதிலும் இருந்தும் மக்கள் ஆர்வமாக இக்கோயிலுக்கு திரிபுர சுந்தரியை தரிசிக்க வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com