எதிர்மறை சக்திகள் வீட்டில் நுழையாதிருக்க என்ன செய்யலாம்?

Main entrance
Main entrance

ரு வீட்டிற்கு நிலைவாசல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில், அதுதான் வீட்டின் தலைவாசல். அங்கு மகாலட்சுமி தங்கி வாசம் செய்வதாக ஐதீகம். வீட்டின் நல்லது, கெட்டது ஆகியவற்றில் இந்த நிலைவாசல்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. வீட்டில் நல்லது நடக்க வேண்டுமா அல்லது கெட்டது நடக்க வேண்டுமா என்பதையும் இந்த நிலைவாசலே தீர்மானிக்கிறது. அதனால்தான் நிலைவாசல் படி ஆட்டம் கண்டால், மொத்த குடும்பமும் ஆட்டம் கண்டுவிடும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

எனவே, ஒரு வீட்டின் நிலை வாசல்படியை பராமரிக்க வேண்டியது ஆன்மிக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நம் வீட்டில், ‘நெகட்டிவ் எனர்ஜி’ என்று கூறப்படும், எதிர்மறை சக்திகள் நுழையாமல் இருக்க, வீட்டின் நிலைவாசல் படியில் என்னென்ன பொருட்களை வைக்கலாம் என்று தற்போது பார்க்கலாம்.

தினமும் நிலைவாசல் படியை கடந்துதான் நாம் வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டும். அப்போது உங்கள் குலதெய்வத்தையும், மகாலட்சுமியையும் நினைத்துக்கொண்டால் அந்த நாள் சுபதினமாக அமையும். நிலைவாசல் படியில், மாவிலை, அருகம்புல், வேப்ப இலை, அரச இலை இவற்றில் ஏதேனும் ஒன்றை கயிற்றில் கட்டி தொங்கவிடலாம். இந்த இலைகள் எதிர்மறை சக்தியை வீட்டில் அனுமதிக்காது.

இதையும் படியுங்கள்:
கேட்பதைக் கொடுக்கும் தெய்வீகப் பசு!
Main entrance

நிலைவாசல் கதவை திறந்த உடன், கண்ணாடியை வைக்கலாம். இது வாஸ்து கண்ணாடி என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கண்ணாடியை தினமும் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். எனினும், வீட்டில் இருப்பவர்கள், இந்தக் கண்ணாடியை அழகு பார்க்கப் பயன்படுத்தக் கூடாது. அதாவது, இந்த நிலை கண்ணாடியை முகம் பார்க்கவோ, தலை சீவவோ பயன்படுத்தக் கூடாது.

வீட்டிற்குள் வரும் எதிர்மறை சக்தியை ஈர்த்து அப்படியே வெளியே அனுப்பும் சக்தி இந்தக் கண்ணாடிக்கு உண்டு. நிலைவாசல் கதவை திறந்தவுடன், வீட்டிற்கு எதிரே உள்ள சுவற்றில் இந்தக் கண்ணாடியை மாட்ட வேண்டும். மேலும், வீட்டில் நுழைபவர்களின் முகம், அந்தக் கண்ணாடியில் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும். இந்தக் கண்ணாடி வீட்டிற்குள் நேர்மறை சக்தியை கொடுத்து கொண்டே இருக்கும். இதனால் வீட்டிற்குள் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com