இந்து மத நம்பிக்கையில் பூனை சகுனத்தோடு ஒப்பிடப்படுகிறது. பெரும்பாலானோர் பூனையை கெட்ட சகுனமாகவே பார்க்கின்றனர். பழைய நம்பிக்கைகளின்படி, பூனைகள் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வருகின்றன. எனவே, வீட்டில் பூனை இருப்பது நல்லதல்ல என்று கூறப்படுகிறது.
பூனை இடமிருந்து வலமாக நகர்ந்தால், அது மோசமான அறிகுறி என்று பலர் நினைக்கிறார்கள். அதுவே வலமிருந்து இடமாக நகர்ந்தால், அது மங்கலகரமானதாகக் கருதப்படுகிறது.
ஒரு பூனையின் அழுகை கூட சாதகமற்றதாகக் கருதப்படுகிறது. இது மரணத்தை குறிக்கும் எனச் சொல்லப்படுகிறது. இந்தியா உட்பட பல நாடுகள் பூனைகளை அசுபமாக கருதுகின்றன. சாஸ்திரங்களின்படி, வெள்ளை பூனை மகாலட்சுமி தாயாரின் ஆசீர்வாதத்தை குறிக்கிறது.
பல ஜோதிடர்களின் கூற்றுப்படி, நீங்கள் கண் விழித்து திடீரென வெள்ளைப் பூனையைப் பார்த்தால், பணம் உங்களிடம் வரப்போகிறது என்று அர்த்தம். வீட்டில் மகாலட்சுமி பூஜை செய்யும்போது பூனை சுற்றித் திரிந்தால், விதி உங்களுக்கு தயவாக இருக்கும் என்று அர்த்தம்.
ஆனால், ஏன் பூனையைக் கண்டால் வண்டி நிறுத்தப்பட்டது தெரியுமா? முற்காலத்தில் மக்கள் மாட்டு வண்டிகளில் பயணம் செய்ததால், பூனை குறுக்கே சென்றால் மாடு பயந்துவிடும் என்பதால் மக்கள் வண்டியை நிறுத்திவிட்டு சிறுது நேரம் கழித்து செல்வார்கள். இது நாளடைவில் மூடநம்பிக்கையாக மாறி, தற்போது கெட்ட சகுனமாகப் பார்க்கப்படுகிறது.