சாபம் என்றால் என்ன? தீயவர்கள் சாபம் விட்டால் பலிக்குமா? 

சாபம்
சாபம் என்றால் என்ன?
Published on

சாபம் என்கிற கருத்து பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்தில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. கதைகள், புராணங்கள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் சாபங்கள் பெரும்பாலும் துரதிஷ்டம், அழிவு மற்றும் மரணத்திற்கு காரணமாக சித்தரிக்கப்படுகின்றன.‌ இந்தப் பதிவில் சாபத்தை முழுமையாக ஆராய்ந்து அதன் வரலாறு மற்றும் சமூக முக்கியத்துவத்தை முழுமையாகத் தெரிந்து கொள்வோம். 

சாபத்தின் வரலாறு: சாபம் என்கிற கருத்து மனித நாகரீகத்தின் தொடக்க காலத்திலிருந்தே இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. பண்டைய கலாச்சாரங்களில் சாபங்கள் பெரும்பாலும் தெய்வங்கள், ஆவிகள் அல்லது சக்தி வாய்ந்த மனிதர்களால் விடப்பட்டதாக நம்பப்பட்டது. அவை தவறான செயல்களுக்கான தண்டனையாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைய பயன்படுத்தப்பட்டதாகவோ கருதப்பட்டது. நமது சமூகத்தில் சாபங்கள் சமூக ஒழுங்கை பராமரிக்கவும், தீய நடத்தைகளை தடுக்கவும் ஒரு வழிமுறையாக பயன்படுத்தப்பட்டன. சாபத்திற்கு உள்ளானவர்கள் பெரும்பாலும் சமூகத்தால் ஒதுக்கப்பட்டனர். இது அவர்கள் தங்களது தவறுகளை மறுப்பரிசலனை செய்து, மன்னிப்பு கேட்கத் தூண்டியது.‌ 

கெட்டவர்கள் சாபம்விட்டால் பலிக்குமா? 

அறிவியல் பார்வையில் சாபம் என்பது ஒரு அமானுஷ்ய நிகழ்வு அல்ல. சாபத்தால் ஏற்படும் தீங்கு பெரும்பாலும் உளவியல் காரணிகளால் ஏற்படுகிறது. தான் சாபம் பெற்றதாக நம்பும் ஒருவர் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பயத்தால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை அனுபவிக்கலாம். மேலும் சாபம் பெற்றவர்கள் சமூக அழுத்தம் மற்றும் சமூகத்தால் ஒதுக்கப்படும்போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இவ்வாறு சாபம் பெற்ற நபர் சமூகத்தால் ஒதுக்கப்படும்போது அவர்களின் சுயமரியாதை மற்றும் நம்பிக்கை குறைந்து மன அழுத்தத்திற்கு உள்ளாகி எதிர்மறையான விஷயங்களை அனுபவிப்பர். 

இதையும் படியுங்கள்:
பிரம்மாவின் சாபம் நீக்கிய பிரமனூர் கைலாசநாதர்!
சாபம்

எனவே சாபம் என்பது ஒரு சிக்கலான கருத்து. இது வரலாறு, சமூகம் மற்றும் மனித உளவியல் ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றி உள்ளது. சாபத்தால் ஏற்படும் விளைவுகள் பெரும்பாலும் உளவியல் காரணிகளாலேயே ஏற்படுகிறது என்பதால், சாபம் விடுவதால் யாரும் நேரடியாக பாதிக்கப்பட மாட்டார்கள். இதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை. 

எனவே, உங்களுக்கு யாரேனும் சாபம் விட்டால் அதை பெரிதாகக் கண்டுகொள்ளாமல், நீங்கள் உங்கள் வேலையில் கவனத்துடன் இருங்கள். தேவையில்லாமல் அவர்கள் விட்ட சாபத்தை நினைத்து பயப்படுவதாலேயே உங்கள் வாழ்க்கையில் கெட்ட விஷயங்கள் ஏற்படலாம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com