வளையல் அணிவதன் நன்மைகள்: ஜோதிடம் சொல்லும் ரகசியம் என்ன?

வளையல் அணிவதன் நன்மைகள்: ஜோதிடம் சொல்லும் ரகசியம் என்ன?
Ronnie Saini
Published on

பெண்கள் இயற்கையாகவே அழகு என்றாலும், அவர்கள் ஆடை அணிகலன் அணிவது அவர்களுக்கு கூடுதல் அழகை சேர்க்கிறது. சுமங்கலிப் பெண்கள், வீட்டில் உள்ள கன்னிப்பெண்கள் கட்டாயம் வளையல் அணிய வேண்டும், பொட்டு வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். பெண்கள் வளையல் போடுவதாலும், பொட்டு வைப்பதாலும் என்ன நன்மைகள் கிடைக்கிறது தெரியுமா?

வளையல்களில் பல வகை உள்ளன. ஜோதிட சாஸ்திரத்தின்படி வளையல்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. பெண்கள் தொடர்ந்து வளையல் அணிந்தால் பல்வேறு பலன்களை அடைய முடியும். திருமணமான பெண்கள் வளையல் அணியாமல் இருந்தால் அது அசுபமானது என்று பாரம்பரியமாகக் கருதப்படுகிறது. வளையல் அணியாத பெண்களை எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. வீட்டில் உள்ள பெண்கள் தொடர்ந்து வளையல் அணிந்தால், அது குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் நல்ல ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.

வளையல் அணிவது பெண்களுக்கு அலங்காரம் மட்டுமில்லாமல், ஆரோக்கியத்தின் பார்வையிலும் மணிக்கட்டில் வளையல்களை அணியும்போது அது உராய்வை உருவாக்குகிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது உயர் இரத்த அழுத்தத்தின் வாய்ப்புகளைக் குறைக்க உதவுகிறது.

கர்ப்பிணிப் பெண்களும் வளையல்களும்:

கர்ப்பிணிப் பெண்கள், குறிப்பாக ஏழாவது மாதத்துக்குப் பிறகு வளையல் அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது. ஏழாவது மாதத்துக்குப் பிறகு, கருவில் இருக்கும் குழந்தையின் மூளை அதிகமாக வளர்ச்சி அடைகிறது. அது மட்டுமின்றி, குழந்தை வெவ்வேறு ஒலிகளையும் அடையாளம் காணத் தொடங்குகிறது. வளையல் சத்தம் குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தூண்டுகிறது.

ஜோதிடம் கூறுவது என்ன?

வளையல் அணியாத பெண்கள் சோர்வு மற்றும் உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், வளையல் ஒலிகளின் நேர்மறை ஆற்றல் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளைத் தடுக்கிறது. அது மட்டுமின்றி, பெண்கள் வளையல் அணிவது தம்பதியிடையே உறவை வலுப்படுத்த உதவுகிறது.

ஜோதிட ரீதியாக ஆடம்பரம் மற்றும் அழகு போன்றவை சுக்ரனுடன் தொடர்புடையவை. உங்கள் ஜாதகத்தில் சுக்ர கிரகம் பலவீனமாக இருந்தால், நீங்கள் வளையல் அணிவது உங்களுக்கு நன்மையை சேர்க்கும் என்று சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com