ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடும் முறை என்ன?

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடும் முறை என்ன?

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த தினம் ஸ்ரீ ஜெயந்தி; கிருஷ்ண ஜென்மாஷ்டமி; கோகுலாஷ்டமி; ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியெனப் பலவிதமாக அழைக்கப்படுகிறது. மாலையில் விளக்கேற்றும் நேரம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.  குழந்தை கண்ணனின் கால்களை வீட்டு வாசலில் தொடங்கிப் பூஜையறை வரை போட வேண்டும்.

இதனை மாக்கோலமாமப் போடுவதின் காரணம்.

“கண்ணன் கோபியர் வீடுகளில் கட்டி வைக்கப் பட்டிருக்கும் உறியில் இருந்த தயிர் சட்டிகளை உடைத்துத் தயிரைக் குடிக்கையில் கீழே சிந்திவிடும்.  அந்தத் தயிரில் தோய்ந்த சிறு கால்களுடன் ஓடிய கண்ணனின் நினைவுச் சின்னம்தான் மாக்கோலப் பாதங்கள்.”

இதேபோல் நிவேதனப் பொருளாக முறுக்கு, சீடை வைப்பதற்கும் காரணம் உள்ளது. அது “கண்ணன், கம்சனைக் கொல்ல, தனது பற்களை நறநறவென கடித்தாராம். அதன் அடையாளம்தான் முறுக்கு, சீடை, தேங்குழல் இத்யாதி.”

 கிருஷ்ண பூஜை மாலை விளக்கேற்றும் சமயத்தில் குளித்துவிட்டு, விளக்கேற்றி, கிருஷ்ணருக்குத் துளசி இலை கொண்டு பூஜித்து, பால், வெண்ணெய், தயிர், அவல், சீடை, முறுக்கு, பாயசம் ஆகிய நிவேதனப் பொருட்களை வைத்து வழி பட வேண்டும்.

ஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்தர நாமாவளி சொல்லி, அர்ச்சனை செய்து, பின் கற்பூர தீபம் காட்டி, பூஜையை நிறைவு செய்ய வேண்டும். ஸ்ரீகிருஷ்ணா அஷ்டகம்; ஸ்ரீ நாராயணத்தில் உள்ள சில பாடல்கள், பாரதியார் கவிதையி்ல் இருக்கும் கண்ணன் பாடல்கள் ஆகியவைகளைப் பாடி வழிபடுபவர்கள் பலர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com