விநாயகர் வழிபாட்டில் தலையில் குட்டிக்கொள்வது ஏன்?

விநாயகர் வழிபாட்டில் தலையில் குட்டிக்கொள்வது ஏன்?

Published on
Kalki vinayagar
Kalki vinayagar

விநாயகர் வழிபாட்டில் பக்தர்கள் தலையில் குட்டிக்கொள்ளும் வழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது. இந்தப் பழக்கத்துக்கு புராண ரீதியாக வரலாற்று நிகழ்வுகள் சில கூறப்படுகின்றன.

ஒரு காலத்தில் கஜமுகாசுரன் எனும் அசுரன் தேவர்களை தனது கட்டுப்பாட்டில் அடக்கி வைத்திருந்தான். அதன் காரணமாக தேவர்கள் அந்த அசுரனின் முன்பு பயபக்தியோடு இருந்ததோடு, தங்களது தலையிலும் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணமும் போட்டனர். இதை அறிந்த விநாயகப்பெருமான் அசுரனை வதைத்து அவனது கட்டுப்பாட்டில் இருந்து தேவர்களை விடுவித்தார். அதன் பின்பு அசுரன் முன்பு தலையில் குட்டிக்கொண்டதையும், தோப்புக்கரணம் போடும் வழக்கத்தையும் தேவர்கள் விநாயகர் முன்பு செய்யத் தொடங்கியதாக ஒரு புராண வரலாறு கூறுகிறது.

ஒருசமயம் அகத்திய மாமுனிவரின் கமண்டலத்திலிருந்த கங்கை நீரை காக்கை வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார். பிறகு சிறுவனாக உருவெடுத்து அகத்திய முனிவரின் முன்பு நின்றார். கமண்டலத்தை கவிழ்த்ததற்காக சிறுவனைக் குட்ட முயன்ற முனிவர், வந்திருப்பது விநாயகரே என்பதை உணர்ந்து, தமது தலையில் தானே குட்டிக்கொண்டார். இன்றளவும் பக்தர்கள் இதைக் கடைப்பிடித்து வருவதாக ஒரு நிகழ்வு கூறப்படுகிறது.

விஞ்ஞான ரீதியாக தோப்புக்கரணம் போடுவது ஒருவித உடற்பயிற்சியாகவே பார்க்கப்படுகிறது. இதனால் புஷ் அப்; புல் அப் மாதிரி கை, கால், உடல் எல்லாமே இதன் மூலம் இயங்குகிறது. சுவாசக் கோளாறுகள், மூட்டு வலிகள் இதனால் குணமாகின்றன.

புதியதாக ஆரம்பிக்கும் எந்த ஒவ்வொரு காரியத்துக்கும் விநாயகரின் அருள் வேண்டும். அதனால் கணபதியை பசும்மஞ்சளில் பிடித்து வைத்து விக்னேஸ்வர பூஜை செய்து அந்தக் காரியம் ஈடேற வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com