
சாஸ்திரப் பிரகாரம் நடுவிரலில் பெரும்பாலும் மோதிரம் அணிவதில்லை. மோதிரத்தின் தங்கம் சூரியனைத் குறிக்கிறது. நடுவிரல் சனி கிரகத்திற்கு சொந்தமானது. சூரியனும் சனியும் எதிரிகளாக இருப்பதால் நடுவிரலில் மோதிரம் அணிவது தவறான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சூரியன் சூடான கிரகம். சனியோ குளிர்ச்சியானது. சூரியன் வலிமை நன்மதிப்பு பலம் மற்றும் மரியாதையை குறிக்கிறது. சனி கிரகமோ விடாமுயற்சி மற்றும் கட்டுப்பாட்டை குறிக்கிறது. சனி மற்றும் சூரியனின் எதிரெதிர் சக்தியால் நடுவிரலில் மோதிரம் அணிவதால் பணக்கஷ்டம் மற்றும் வேலையில் பல பிரச்னைகள் ஏற்படும்.
ஜோசியம் படி நடுவிரலில் மோதிரம் அணிவதால் தந்தை மகன் இருவருக்குமிடையே பிரச்னைகள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
மேலும் இப்படி அணிபவர்களுக்கு தன்னம்பிக்கை குறையும்.
நடுவிரலில் மோதிரம் அணிபவர்களுக்கு கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் இருக்காது. எதிரெதிர் சக்திகளை கொண்டதை விரலில் அணிந்தால் இன்னல்களே ஏற்படும்.
ஆகவே நடுவிரலில் மோதிரம் அணிவது தவிர்க்கப்படுகிறது.