ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபட்டால் வெற்றி நிச்சயமாமே!

Lord Sarabeswarar
Lord Sarabeswarar
Published on

- அனிஷா வி.எஸ்

கலியுக காலத்தில், பரபரப்பாக இயங்கும் மனிதர்கள் தங்கள் தவறுகளையும், பாவங்களையும் போக்கிக் கொள்ள இறைனைச் சரணடைகின்றனர். இறை வழிப்பாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக சரபேஸ்வரர் வழிபாடு திகழ்கிறது. இவரை ராகு காலத்தில் வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்வில் வெற்றி உண்டாகும்.

ராகு காலத்தில் வழிபாடு ஏன்?

ராகு என்பது மாயை, சூனியம், பில்லி, ஏவல் போன்ற காரியங்களைச் சுட்டிக்காட்டும் கிரகமாகக் கருதப்படுகிறது. ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவதால் இயற்கையாக உருவாகும் கிரக சங்கடங்களைக் குறைத்து, சோதனைகளையும் பல மடங்கு குறைக்கச் செய்கிறது.

மேலும், ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவதால் மனக்கவலை, கோபம், மன குழப்பங்கள், தொழில் தடைகள், வருமான இழப்புகள் நீங்கி, வீட்டில் அமைதி, குடும்ப உறவுகளில் பாசம் பெருகும்.

பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்ற எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக சரபேஸ்வரர் வழிபாடு அமைகிறது.

சிவபெருமானின் ரூபமே சரபேஸ்வரர்

ஒருமுறை, இறைவன் எங்கு இருக்கிறார் என்று இரணியன் கேட்டபோது, தூணைப் பிளந்து கொண்டு நரசிம்ம மூர்த்தி உக்கிரமாக அவதரித்தார். அப்படி வெளிவந்த இரணியனை நரசிம்மர் வதம் செய்து பிரகலாதருக்கு வரம் அளித்தார். அதன் பிறகும் அவரது உக்கிரம் தணியவில்லை. அவரின் கோபத்தைத் தணிக்க தேவர்கள் எல்லாம் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அதன்படி, சிவபெருமானும் பறவையாகவும், மனிதராகவும், விலங்காகவும் நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிக்கச் 'சரபம்' எனும் ரூபத்தில் அவதாரம் எடுத்தார்.

சரபம் எனும் பறவையின் இறகை கொண்டு, யாழி முகத்துடன், மனித உடலோடு கலந்த மூன்றின் கூட்டணியாக சரபேஸ்வரர் தோன்றினார். உக்கிரமான நரசிம்மரின் முன்பு நின்று தனது இரண்டு இறக்கைகளால் அரவணைத்துக் கொள்கிறார், அவரின் கோபமும் முழுமையாகத் தணித்து விடுகிறது. அப்படி, கோபம் தணிந்து காட்சிதரும் நரசிம்ம மூர்த்திக்குக் காரணமான சிவபெருமானின் ரூபமே சரபேஸ்வரர் வழிபாடாகும். சரபேஸ்வரரின் சக்திகளக விளங்கும் அன்னை பிரத்யங்கிரா தேவியையும், சூலினியையும் வழிபட்டால் துன்பங்கள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த சரபேஸ்வரரை பிரதோஷ காலங்களில் வழிபடுவது சிறந்தது. இவரின் வழிபாட்டிற்கு உரியக் காலமாக ராகு காலம் திகழ்கிறது. எனவே, ஞாற்றுக்கிழமைதோறும் மாலை 4:30 மணியிலிருந்து 6 மணி வரையிலான ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபட வேண்டும்.

வழிபாட்டு முறை

திருச்சிற்றம்பலம் அல்லது சிவ நாமங்களைச் சொல்லி வழிபாடு செய்யலாம்.

'ஓம் ஸ்ரீ சரபேஸ்வராய நம' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபாடு செய்யலாம்.

குங்குமம், சந்தனம், இளநீர், பன்னீர், பழங்கள் கொண்டு நிவேதனம் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம்: டிக்கெட் முன்பதிவு மற்றும் இணையதள முகவரி...
Lord Sarabeswarar

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com