மாடித்தோட்டத்தை எளிதாக பராமரிக்க டிப்ஸ்!

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

-சௌமியா சுப்ரமணியன்.

  • காய்ந்த பூக்களை பூச்செடிகளிலிருந்து அகற்ற வேண்டும். அந்த பூக்கள் உள்ள கிளையின் தண்டுப்பகுதிகளை குறிப்பிட்ட அளவு வெட்டி விட்டால் செடிகளில் ஆரோக்கியமான வளர்ச்சி இருக்கும். ஏதாவது நோய்த்தாக்குதலால் பாதிக்கப்பட்ட, உடைந்த மற்றும் முறுக்கப்பட்ட கிளைகளையும் அகற்றும் போது செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கக்கூடும்.

  • கோடை காலத்தில் ஆவியாகும் தன்மை அதிகளவில் இருப்பதால், மொட்டை மாடிச் செடிகளுக்கு தினமும் இரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். மற்ற நாட்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விட்டால் போதுமானது.

  • வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றியுள்ள மண்ணை கொத்தியோ அல்லது கிளறியோ விட்டால் தான் வேர்ப்பகுதிக்கு சத்துக்கள் முழுமையாக செல்லக்கூடும். இல்லா விட்டால் மண் இறுகி விடும் போது செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

பூச்செடி
பூச்செடி
  • செடிகளுக்கு மூன்று மாதத்துக்கு ஒரு முறை கட்டாயமாக ஒரு கைப்பிடியாவது இயற்கை உரம் அளிக்க வேண்டும். சாமந்தி, செம்பருத்தி போன்ற மகரந்தச் சேர்க்கைக்கு வழி வகுக்கும் செடிகளுக்கு முக்கியத்துவம் தரலாம்.

  • இயற்கைப் பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணெயை மாதம் ஒருமுறையாவது அனைத்து செடிகளிலும் தெளிக்க வேண்டும். மேலும், வேப்ப இலைகளை நன்றாகக் காயவைத்தோ அல்லது ஏற்கனவே காய்ந்த வேப்ப இலைகளையோ தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை செடிகளின் வேர்ப்பகுதியில் ஒரு கைப்பிடி வீதம் போட்டு மண்ணை நன்றாக கிளறி விட வேண்டும். இது அடி உரமாக மட்டுமின்றி பூச்சிக்கொல்லியாகவும் செயல்படும்.

செடி
செடி
  • தோட்டங்களிலுள்ள செடிகளில் பூச்சித்தாக்குதலை கண்டறிந்து முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தண்ணீருடன் சோப்புக்கரைசல், வேப்ப எண்ணெய் கலந்து ஸ்பிரே செய்யும் போது ஒரு சில பூச்சித்தாக்குதலை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். கடைகளில் உரிய மருந்துகளை வாங்கி பூச்சித்தாக்குதலை தவிர்க்கலாம்.

  • மண் பூந்தொட்டிகளில் நாளடைவில் ஆங்காங்கே உப்புப்படிவங்கள் ஏற்படக்கூடும். வெள்ளை வினிகர், ரப்பிங் ஆல்கஹால் மற்றும் தண்ணீரை சம அளவில் கலந்து அதன்மீது ஸ்பிரே செய்யவும். தொடர்ந்து ஏதாவது பிரஷ் கொண்டு நன்றாக தேய்த்தால், அவை நீங்கிவிடும். ஓரிரு நாட்களுக்கு வெயிலில் நன்றாக காயவைத்து பின்னர் அதில் மண்ணைக் கொட்டி செடிகளை நடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com