இந்திய ரயில்வே பற்றிய 10 சுவாரஸ்யமான உண்மைகள்..!
இந்திய ரயில்வே 170 ஆண்டு கால வரலாறு கொண்டது . உலகின் 4 வது பெரிய ரயில்வே நெட்வொர்க்.உலகிலேயே மிகவும் பரபரப்பான ரயில் நெட்வொர்க்களில் ஒன்று. IRCTC புள்ளி விவரங்கள்படி ஒரு சில மணி நேரங்களில் ஒரு மில்லியன் டிக்கெட்கள் ஆன்லைனில் ரிசர்வ் செய்யப்படுகிறது.
இந்திய ரயில்வேயில் 12,817 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 7000 க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது உலகிலேயே மிக அதிகமான ரயில் பாதைகள் நெட் ஒர்க் கொண்டது. இந்திய ரயில்வேயின் பாதை 115,000 கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது, இது ஆசியாவின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயக்கப்படும் உலகின் இரண்டாவது பெரிய நெட்வொர்க்காக திகழ்கிறது. முழு பாதையும் 67,368 கி.மீ. நீளமுள்ள பாதையை உள்ளடக்கியது. இந்திய ரயில்வேயின் முழு பாதையும் பூமத்திய ரேகையை 1.5 முறை வட்டமிட முடியும்
சராசரியாக தினமும் 24 மில்லியன் மக்கள் ரயிலில் பயணப்படுகிறார்கள். ஆண்டுக்கு 7.2 பில்லியன் பயணிகளை இந்திய ரயில்வே கையாளுகிறது.1986 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே புது தில்லியில் தனது முதல் கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவைச் செய்தது. ஒரு நிமிடங்களில் 12 லட்சம் டிக்கெட்கள் புக் ஆகிறது.
உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் இருப்பது இந்தியாவில்தான்.இதுவே இந்தியாவின் பொறியியல் துறையை உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் மீது ஆற்றின் படுக்கையிலிருந்து இது 359 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.இது உதம்பூர் -ஶ்ரீநகர் -பாராமுல்லா ரயில் தொடர்பு புராஜெக்ட் பகுதியாக செயல்படுகிறது.
நவப்பூர் என்ற ரயில்வே ஸ்டேஷன் இரண்டு மாநிலங்களில் இருந்து செயல்படுகிறது. இதன் ஒரு பகுதி குஜராத் மாநிலத்திலும், மற்றொரு பகுதி மகாராஷ்ட்ரா மாநிலத்திலும் இருக்கிறது. இந்த ரயில்வே ஸ்டேஷன் உள்ளே நுழைந்தால் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு சென்று விடலாம்.
இந்திய ரயில்வேயின் வளர்ச்சியில் யானைகளுக்கு முக்கிய பங்கு உண்டு.பல காடுகளை அழித்துதான் பல ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டன.அந்த சமயத்தில் காடுகளை அழித்து ரயில்வே லைன்கள் அமைக்க எண்ணற்ற காட்டு யானைகள் உதவின. இதை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வேயின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தின்போது ஒரு யானை ரயில்வே கார்டு உடை அணிந்த சின்னம் வெளியிடப்பட்டது. இந்த சின்னத்தின் பெயர் "போலு" (Bholu). இந்திய ரயில்வேயின் 150 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் 2002 ஆம் ஆண்டு தேசிய வடிவமைப்பு நிறுவனத்தால் போலு வடிவமைக்கப்பட்டது. பச்சை விளக்குடன் கூடிய சிக்னல் விளக்கை போலு ஏந்தியிருப்பதைக் காணலாம்,
உலகிலேயே மிக நீளமான ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் இருப்பது இந்திய ரயில்வேயில்தான். உத்தரபிரதேசம் கோரக்பூர் ரயில்வே ஸ்டேஷனில்தான் இந்த பிளாட்பாரம் உள்ளது. இதன் சராசரி நீளம் 1,366 மீட்டர்கள். இந்த பிளாட்பாரத்தில் ஒரே நேரத்தில் பல ரயில்களை நிறுத்த முடியும்.
இந்தியாவின் அதிவேகமான ரயில் கேட்டிமான் எக்ஸ்பிரஸ்தான். இது மணிக்கு 160 கிமீ வேகத்தில் பயணிக்கிறது. டெல்லி-ஆக்ரா இடையே இந்த ரயில் இயங்குகிறது.
ஃபேரி குயின் (தேவதை ராணி) எனும் ரயில்தான் இந்திய ரயில்வேயின் மிகப் பழமையான ரயில். இது மட்டுமே இன்னும் நீராவி எஞ்சினில் இயங்கும் ரயில். டெல்லியிலிருந்து அல்வார் பகுதிக்கு இது பாரம்பரியத்தை நிலைநிறுத்த இயக்கப்படுகிறது.
இது 1885 ம் ஆண்டிலிருந்து இயங்கி வருவதால் உலகின் மிகப் பழமையான ரயில் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சுவாரஸ்யமாக, ஃபேரி குயினுக்கு 1972 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் பாரம்பரிய அந்தஸ்து வழங்கியது, இது ஒரு தேசிய புதையல் அந்தஸ்தை வழங்கியது.
உலகிலேயே அதிகளவில் தொழிலாளர்கள் பணியாற்றுவது இந்திய ரயில்வேயில்தான். இதில் 103 மில்லியன் தொழிலாளர்கள் உள்ளனர். இது உலகின் எட்டாவது பெரிய வணிக நிறுவனமாக உள்ளது.