மகிழ்ச்சியில் திளைக்கும் பின்லாந்து நாடு பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்கள்...!

பின்லாந்து ...
பின்லாந்து ...

பின்லாந்து, உலகின்  நம்பர் ஒன் மகிழ்ச்சிகரமான நாடு மட்டும் அல்ல, அழகான நாடுகளில் ஒன்று.  வடகிழக்கு ஐரோப்பாவில் உள்ள குடியரசு நாடான பின்லாந்தின் தென்மேற்கில் பால்டிக் கடல் அமைந்துள்ளது. ரஷ்யா, சுவீடன், நார்வே,  போன்ற நாடுகள் புடைசூழ அமைந்திருக்கிறது பின்லாந்து.  இந்நாட்டின் தலைநகர் ஹெல்சின்கி . இங்கு தான் அந்நாட்டின் வெளிநாட்டவர்கள் பாதி பேர் உள்ளனர்.

பின்லாந்தை சுற்றி 75 சதவீதம் காடுகள்தான் உள்ளது. காடுகளை அவர்கள் கடவுளின் வடிவமாக பார்க்கிறார்கள். பின்லாந்து நாட்டை "ஏரிகளின் நாடு" என்கிறார்கள். இதற்குக் காரணம், இங்கு ஒரு லட்சத்து 87 ஆயிரத்துக்கும் அதிகமான ஏரிகள் உள்ளன, நாட்டின் அழகைக் கூட்டுவதே இந்த ஏரிகள்தான். இந்த ஏரிகளின் நாடு வேறு பல சுவாரஸ்யமான விஷயங்களையும் கொண்டிருக்கிறது.

இந்த நாடு அதன் வானிலை மற்றும் வாழ்க்கை முறைக்கு உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது. பின்லாந்தின் வானிலை மிகவும் ரம்மியமானது, மனம் குளிர வைப்பது. கோடைகாலத்தில், இரவு 10 மணிக்கும் கூட மாலை நேரம் போல வெளிச்சம் இருக்கும். ஆனால், குளிர்காலத்தில் பகலிலும் இருள் கவிந்து காணப்படும். மதிய நேரத்தில் தான் சூரியனின் வெளிச்சம் சிறிந்து நேரம் பின்லாந்தை தரிசிக்கும்.

பின்லாந்து நாட்டில் ஒரு குழந்தை பிறந்தால் அரசு சார்பில் ஒரு பெட்டி வழங்கப்படுகிறது அதில் குழந்தைகளுக்கு தேவையான 63 பொருட்கள் இருக்கும் ஒரு வருடத்திற்கு பெற்றோர்கள் அந்தக் குழந்தையை பராமரிக்க எதுவும் வாங்க வேண்டியதில்லை. இந்நாட்டில் ஒரு குழந்தை பிறந்தால் பெற்றோர்களுக்கு 9 மாதம் சம்பளதுடன் கூடிய விடுமுறை தரப்படுகிறது. குழந்தையின் தந்தை குழந்தையை பராமரிக்க விரும்பினால் 3 வருடம் வரை வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கலாம்.

பின்லாந்து ...
பின்லாந்து ...

உலகிலேயே அதிக பால் குடிப்பவர்கள் மற்றும் காபி குடிப்பவர்கள் பின்லாந்து நாட்டினர்தான். இவர்கள் தலைக்கு ஒரு லிட்டர் பால் பருகுகிறார்கள். அதேவேளையில் நபர் ஒருவர் வருடத்திற்கு 12 கிலோ காபி தூளை பயன்படுத்துகிறார்.

ஒருவரின் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு உங்கள் காலணிகளைக் கழற்றுவது போல, பெரும்பாலான பின்லாந்து அலுவலகங்களில் ஷூ இல்லாத கொள்கை உள்ளது. சில அலுவலகங்களில் "உட்புற காலணிகள்" இருக்கும், ஆனால் பெரும்பாலும், ஊழியர்கள் சாக்ஸ் மட்டுமே அணிவார்கள்.

பின்லாந்து நாட்டில் குழந்தைகள் 7 வயதில் தான் பள்ளிக்குச் செல்ல தொடங்குகின்றனர். பள்ளிக்கட்டணம் இல்லை. மேலும், பள்ளிக்குத் தேவையான அனைத்தும் இலவசம்.இங்கே குழந்தைகள் இரண்டு பிறந்த நாள் பார்ட்டி கொண்டாடுகிறார்கள் . ஒன்று குடும்பத்துடன் மற்றொன்று தன் நண்பர்களுக்காக.

பின்லாந்து ...
பின்லாந்து ...

தோல்விகளை அலசி ஆராய்ந்து அதிலிருந்து மீண்டு எழுந்து வெற்றியை நோக்கி நகர்ந்து செல்லும் வகையில் வருடத்திற்கு ஒரு நாள் அக்டோபர் 13 ம் தேதி அன்று "தேசிய தோல்வி நாளாக " பின்லாந்து நாட்டில் கொண்டாடுகிறார்கள்.

பின்லாந்தில் 'டோர்னியோ' ('Torneo') என்று அழைக்கப்படும் மிகவும் தனித்துவமான கோல்ஃப் மைதானம் உள்ளது, அதில் பாதி பின்லாந்திலும் பாதி ஸ்வீடனிலும் உள்ளது. இந்த கோல்ஃப் மைதானத்தில் மொத்தம் 18 துளைகள் உள்ளன, அவற்றில் ஒன்பது பின்லாந்திலும், மீதமுள்ள ஒன்பது சுவீடனிலும் உள்ளன. இங்கே மக்கள் பெரும்பாலும் விளையாடும்போது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
மாங்காய் குழம்பும், முருங்கைக்காய் தீயலும்!
பின்லாந்து ...

பின்லாந்து மற்றுமொரு வித்தியாசமான விஷயத்திற்கு பிரபலமானது. கணவன், தனது மனைவியின் முதுகில் தூக்கிக் கொண்டு ஓடும் போட்டி பின்லாந்தில் பிரபலமானது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அவரது மனைவியின் எடைக்கு சமமான பீர் பரிசாக வழங்கப்படுகிறது. இதுபோன்ற போட்டி அநேகமாக உலகில் வேறு எங்கும் இருக்காது. 

பின்லாந்தின் ஒரு சட்டம் மிகவும் சுவாரஸ்யமானது. இங்கு போக்குவரத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் விதம் வித்தியாசமானது. விதிகளை மீறுபவர்களின் சம்பளத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். பின்லாந்து நாட்டில் டாக்ஸிகளில் போகும் போது பாடல்கள் கேட்பது சட்டப்படி குற்றம். அதை மீறுகிறவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com